மேட்டூர் சுகாதார சீர்கேடு முதல் ரூ.200க்கு விற்பனையாகும் தக்காளி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஆகஸ்ட் 1, 2023
Published on : 01 Aug 2023 18:28 pm
1 / 23
காட்பாடியில் புதியதாக தொழிற்பட்டை அமைப்பது தொடர்பாக கண்டறியப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா. ஆய்வின் போது தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 23
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்ற கல்லுரி மாணவிகள். பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன். | படம்: ஜெ.மனோகரன்
3 / 23
4 / 23
5 / 23
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மாணவ மாணவிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 23
7 / 23
கேரளாவில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 1,051 கிலோ சந்தன மரக்கட்டைகளை பார்வையிடும் போலீசார் மற்றும் வன அதிகாரிகள். | படம் ஜெ மனோகரன்
8 / 23
9 / 23
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 23
கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் குறித்து மோசமாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 23
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் சேதமடைந்து மேற்கூரை இல்லாததால் வெயிலில் அவதிப்படும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள். | படம்: நா.தங்கரத்தினம்
12 / 23
13 / 23
14 / 23
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூ. | படம்: நா.தங்கரத்தினம்
15 / 23
திருமங்கலம் - மதுரை சாலையில் ராஜாஜி சிலை அருகே கொடநாடு கொலை கொள்ளை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். | படம்: நா.தங்கரத்தினம்.
16 / 23
17 / 23
18 / 23
19 / 23
கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்ற தர தமிழக அரசை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
20 / 23
21 / 23
மேட்டூர் அணை காவிரி ஆற்றை ஒட்டியுள்ள படித்துறை பகுதியில் தேங்கி கிடங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. | படம்: சக்திவேல்
22 / 23
23 / 23
திருவண்ணாமலையில் ஒரு கிலோ தக்காளியின் விலை இருநூறு ரூபாயை நெருங்கி வருகிறது. | படம்: தினேஷ்குமார்