Published on : 26 Jul 2023 19:02 pm

அண்ணா நினைவிடம் சீரமைப்பு முதல் இறந்த நிலையில் மீன்கள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 26, 2023

Published on : 26 Jul 2023 19:02 pm

1 / 31
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு துாணுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். அருகில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். | படம்: எம்.சாம்ராஜ்.
2 / 31
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு துாணுக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்
3 / 31
புதுச்சேரி புதிய பைாஸ் சாலை பணிகள் முடிக்கப்படாததால் போடப்பட்ட சாலை வயல்வெளிபோல் சகதியாக காணப்படும் பைபாஸ் ரோடு. | படம்: சாம்ராஜ்
4 / 31
5 / 31
சாலை பணியால் மேம்பாலம் அமைப்பதற்க்காக வாய்கால் அடைக்கப்பட்டதால் தேங்கிய கழிவு நீர் சாக்கடைகாயக கருப்பு நிறமாக துார்நாற்றம் வீசுகிறது இதனால் சுற்றியுள்ள பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. | படம்: சாம்ராஜ்
6 / 31
7 / 31
8 / 31
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து "காற்று மாசுபாடு தவிர்த்தல்" விழிப்புணர்வு கலைப்பயண பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 31
மதுரை ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான சைக்கிளை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 31
11 / 31
பெண் சுகாதார தன்னார்வலர்களை ஊழியராக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.26,000 ஊதியம் நிர்ணயம் செய்து தற்போது வழங்கும் ஊக்கத்தொகையை நேரடியாக ஊழியர் வங்கி கணக்கில் அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 31
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மென்டர் செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு நிரந்தர செவிலியர் பணியிடங்களை சரண்டர் செய்வதற்கு பதிலாக அங்கு புதிய பணியிடங்களை உருவாக்கி அதில் எம்ஆர்பி ஒப்பந்த பணியாளர்களை நிரந்திரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 31
நாற்றங்காலில் விதை விட்டு, கூலியாட்கள் கொண்டு நடவு செய்ய வேண்டுமென்றால் நாற்றுப் பறி, நடவு கூலி என ஏக்கருக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது உள்ள சூழலில், ஆள்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் நடவுப் பணிகளையும் மேற்கொள்ளவும் முடியவில்லை. இதனால், டெல்டாவில் விவசாயிகள் பலர் நேரடி விதைப்பு செய்யும் டிரம் சீடர் கருவி மூலம் நெல் விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். | இடம் - ஐயனாபுரம், தஞ்சாவூர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 31
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும், பாலியல் வன்கொடுமையை தடுத்திட கோரியும் மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணித்து வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 31
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பொதுமக்களின் தீர்க்கப்படாத குறைகள் தொடர்பாக மனு பெறப்பட்டு வரும் நிலையில் முதியவர்கள் இரண்டு மாடி படிக்கட்டுகளை ஏறி சென்று மனு அளிக்கவும், இறங்கி வரவும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முதியோர், மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலையை கருதி காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அல்லது தரை தளத்திலோ அவர்களிடம் மனுக்களை பெற்று தீர்வுகாண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 31
17 / 31
கோவையில் இரு நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில், மழை கோட்டுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. பாரதி பார்க் சாலையில் சாலையோரம் விற்கப்படும் மழைக் கோட்டுகள்.| படம்: ஜெ.மனோகரன்
18 / 31
19 / 31
போதை பொருள் இல்லா கோவையை உருவாக்கும் முயற்சியில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 9003251100 வாட்ஸ் ஆப் எண்ணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிமுகம் செய்தார். | படம்: ஜெ.மனோகரன்
20 / 31
மணிப்பூர் மாநில பிரச்சனைகளை கண்டு கொள்ளாத மத்திய பாஜக அரசை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழர் கட்சியினர். | படம்: ஜெ.மனோகரன்
21 / 31
மணிப்பூரில் நடந்த நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 31
இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி எதிரொலி வேலூரில் மின் விளக்குகள் மகப்பேறு மற்றும் பிரசவ பிரிவு கட்டிடம் | படம்: படங்கள்: வி.எம்.மணிநாதன்.
23 / 31
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம் அருகே ரெசிடென்சி பங்களா பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அருகே அங்கன்வாடி மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேனீக்கள் பெரிய அளவிலான கூடுகளைக் கட்டி வைத்துள்ளன. இந்த தேனீக்களால் குழந்தைகள் மற்றும் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தேனீ கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். | படம்: ஆர்.வெங்கடேஷ்
24 / 31
சென்னை சீனிவாசபுரம் முகத்துவராம் பகுதியில் கலக்கும் பிளாஸ்டிக் உள்ளிட் கழிவுகளால் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள். | படம்:எஸ்.சத்தியசீலன்
25 / 31
26 / 31
27 / 31
28 / 31
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் இல்லாமல் குளுமையான வானிலை நிலவி வரும் நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று பெய்த சாரல் மழையில் கடற்கரையில் விளையாடி சிறுவர்கள்.| படம்:எஸ்.சத்தியசீலன்.
29 / 31
30 / 31
31 / 31
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் புனரமைப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் வருகைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. | படம்:எஸ்.சத்தியசீலன்.

Recently Added

More From This Category

x