1 / 33
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அருகில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈஸ்வரப்பன், கார்த்திகேயன், அமுலு விஜயன், உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 33
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிஐடியு சார்பில் ஆட்டோ, கட்டுமானம் சாலை போக்குவரத்து, சுமைப்பணி, தையல், வீட்டு வேலை, மணல் வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 33
மதுரை எல்லிஸ் நகர் நலவாரிய அலுவலகம் முன்பாக சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பாக கட்டுமான தொழிலாளருக்கு பென்ஷன் தொகையை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 33
மதுரை செல்லூரில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 33
வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருள் சூழ்ந்த நிலையில் மகப்பேறு மற்றும் பிரசவ பிரிவு கட்டிடம். கர்ப்பிணி தாய்மார்களை பிரசவத்துக்கு அழைத்து வரும் உறவினர்கள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் வெட்ட வெளியில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சீண்டி விடுமோ என்ற பயத்துடன் இருளில் காத்திருப்பு. பழுதடைந்து பயனில்லாத நிலையில் இருளில் காட்சி பொருளாக நிற்கும் உயர் கோபுரம் மின் விளக்குகள். அதிகாரிகள் கண்ணில் பட்டு ஒளிருமா?.. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
6 / 33
7 / 33
8 / 33
தஞ்சாவூர் அருகே கரம்பை பகுதியில் குறுவை சாகுபடிக்காக நாற்றுப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி. | படம்: ஆர்.வெங்கடேஷ்
9 / 33
10 / 33
11 / 33
தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கிராமப்புறங்களில் பொது இடங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பனை விதைகளை விதைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பனை விதைகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் வழங்கினர். | படம்:ஆர்.வெங்கடேஷ்
12 / 33
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 33
மணிப்பூர் நடைபெற்று வரும் வன்முறைகளை தடுக்க தவறிய மணிப்பூர் அரசையும், மத்திய அரசையும் கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
14 / 33
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் ஒன்றாக மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா | படம்: ஜெ.மனோகரன்
15 / 33
16 / 33
17 / 33
ரயில்வே மேம்பாலம் வேண்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை சூர்யநகர் பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன்
18 / 33
19 / 33
ஆகஸ்ட் -15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி முன்னேற்பாடாக கோவை டவுன் ஹால் காந்திஜி கதர் ஸ்டோர் தேசிய கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். | படம்: ஜெ.மனோகரன்
20 / 33
21 / 33
22 / 33
23 / 33
மதுரை கே.கே நகர் சாலையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே பாதள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையில் புதைந்த லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம். | படம்: நா.தங்கரத்தினம்.
24 / 33
25 / 33
26 / 33
மதுரை கண்ணனேந்தல் பரசுராம்பட்டி கங்காநகர் பகுதியில் வீட்டில் தோட்டம் வைத்து பசுமை வீடாக பராமரித்து வரும் முன்னாள் வேலன் அதிகாரி ஆறுமுகம். | படம்: நா.தங்கரத்தினம்.
27 / 33
28 / 33
29 / 33
30 / 33
31 / 33
32 / 33
எதிரே வரும் வாகனம் தெரியாத அளவு புழுதி சூழ்ந்து வாகன விபத்துகள் ஏற்படும் வகையில் காணப்படும் இந்திரா நகர் ஆனையூர் பிரதான சாலை, மதுரை. | படங்கள்: நா.தங்கரத்தினம்.
33 / 33