1 / 38
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் அரசு பணியில் காது மற்றும் வாய் பேசாதோர் அனைவருக்கும் வேலை வாய்ப்பில் 1 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 38
மதுரை பழங்காநத்தம் பகுதியில் திமுக மாவட்ட மகளிர் அணி சார்பாக மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 38
4 / 38
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மதுரை அண்ணாநகர் பகுதியில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 38
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து பழங்குடியினர் பேரியக்கம் சார்பாக மணிப்பூர் மாநிலத்தின் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்து மாநிலத் தலைவர் மகேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 38
கோவை சிந்தாமணி நியாய விலைக்கடையில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு முகாம். | படம்: ஜெ.மனோகரன்
7 / 38
8 / 38
9 / 38
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்தையும், மத்திய அரசையும் கண்டித்து, கோவை டாடாபாத் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மகளிர் அணியினர். | படங்கள்: ஜெ.மனோகரன்
10 / 38
11 / 38
நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க காது மற்றும் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள். | படம்: ஜெ.மனோகரன்
12 / 38
மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மகளிர் அணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 38
ஆற்றில் தண்ணீர் வந்ததால் விவசாயிகளுக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை. எங்களுக்கும்தான் என வடவாற்றுக்குள் துள்ளி குதித்து உற்சாக குளியல் போட்ட சிறுவர்கள். | இடம்: கரந்தை, தஞ்சாவூர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 38
15 / 38
மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் வன்முறையைக் கண்டித்து, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
16 / 38
தஞ்சாவூர் மேல ராஜவீதியில் உள்ள தனியார்ப் பள்ளி வளாகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
17 / 38
மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். | படம்: ஆர்.வெங்கடேஷ்
18 / 38
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கையில் தாலி கயிற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்த பெண்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
19 / 38
20 / 38
மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
21 / 38
தஞ்சாவூர் அருகே மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வரும் குறுவை நெற்பயிர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
22 / 38
23 / 38
24 / 38
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட கூலித் தொழிலாளி மேகராஜை மீட்ட காவல் துறையினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
25 / 38
26 / 38
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட
விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் இன்று தொடங்கியது. வேலூர் விருபாட்சிபுரம் அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் திரளான பெண்கள் வந்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துக்கொண்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
27 / 38
28 / 38
சேலம் மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளிடம் அதிக சுங்க கட்டணம் வசூலிப்பதாக கூறி சேலம் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஏஐ டியுசி சாலையோர வியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர். | படம்: எஸ்.குரு பிரசாத்
29 / 38
30 / 38
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
31 / 38
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பேரணி சென்ற அரசு ஊழியர்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
32 / 38
33 / 38
மதுரை அழகர்கோவில் சாலையில் தமுக்கம் மைதானம் முன் அமைந்துள்ள தமிழன்னை சிலை. | படம்: நா. தங்கரத்தினம்.
34 / 38
35 / 38
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. | படம்: கோபாலகிருஷ்ணன்
36 / 38
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இன்று ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். | படம்: ஜனநாயக செல்வம்
37 / 38
38 / 38