1 / 32
மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் நலவாரியம் அலுவலகம் முன்பாக சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கட்டுமான தொழிலாளர்களுக்கு மற்ற மாநிலங்கள் போல் தீபாவளி சிறப்பு நிதி 5000 வழங்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 32
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசுத்துறை ஓய்வுதியர் சங்கம் சார்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 32
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 32
தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 32
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலயை அகலப்படுத்தும் பணிக்காக சாலையில் இருந்த தடுப்புசுகரை அகற்றியதால் சாலை புழுதியாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புழுதியால் அவதிப்படுகின்றனர். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 32
7 / 32
புதுசேரி அதிக சுற்றுலாப்பயிகள் கவரும் ஓயிட் டவுன் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைத்து வாகன நிறுத்தும் இடமாக தடுப்புகளை வைத்துள்ளள தனியார் அமைப்பினர். | படம்: எம்.சாம்ராஜ்
8 / 32
9 / 32
புதுச்சேரியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கக்கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. | படம்: எம்.சாம்ராஜ்
10 / 32
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாலையில் போக்குவரத்திற்க்கு இடையூறாக ஆக்கிரமித்து வைத்துள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீசார். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 32
12 / 32
13 / 32
தஞ்சாவூரில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப். உடன் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம் மற்றும் பலர் உள்ளனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 32
தஞ்சாவூர் புத்தகத் திருவிழா அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற அரசு இல்ல மாணவர்களுக்கான புத்தகங்கள் பெறும் புத்தக தான பெட்டியில் புத்தகங்களை போடும் மாணவிகள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
15 / 32
தஞ்சாவூரில் மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
16 / 32
வின்னை தொடும் வண்ண லேசர் விளக்குகள் வண்ணமயமாக ஜொலிக்கும் கலைஞர் நினைவு நூலகம். | படம்: நா.தங்கரத்தினம்.
17 / 32
18 / 32
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி தண்ணீரை தூய்மைப்படுத்த ஆர்ஓ வாட்டர் பியூரிஃபையர்கள் போன்று 4 நவீன ஆக்சிஜன் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. | படம்: ஆ.நல்லசிவன்
19 / 32
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் துர்கா ஸ்டாலின் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். | படம்: நல்லசிவன்
20 / 32
21 / 32
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டு தீ சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை எடுத்து மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் பாதுகாப்பாக தரை இறங்கினர். | படம்: கோபாலகிருஷ்ணன்.
22 / 32
23 / 32
24 / 32
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் ஐந்தாம் நாளான இன்று பெரியாழ்வார் மங்களா சாசன வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். | படம்: கோபாலகிருஷ்ணன்
25 / 32
26 / 32
மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் கே.ஜே. பிரவீன் குமார், காவல் துணை ஆணையர் பி.கே. அரவிந்த் துணை மேயர் நாகராஜன். | படம்: நா. தங்கரத்தினம்.
27 / 32
28 / 32
29 / 32
தமிழ்நாடு தினத்தையொட்டி, கோவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை தொடங்கி வைத்து பார்வையிட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்
30 / 32
31 / 32
32 / 32