1 / 27
மதுரை தெற்கு மாசி வீதியில் பிஜிஎம் பிளாஸ்டிக் கம்பெனி அதிகாலையில் தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 27
3 / 27
4 / 27
5 / 27
6 / 27
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடைபெற இருப்பதால் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எஸ்.பியிடம் மனு அளித்தனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 27
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 27
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லீம் மற்றும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்களின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 27
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரண்டு மயில்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 27
11 / 27
அந்தியும் அழகும்: அந்தி சாயும் பொழுதில், ஆல மரமும், கண்மாய் நீரும், வானில் திரண்டுள்ள மேகக்கூட்டங்களும் வர்ணஜாலமாய் ஜொலிக்கின்றன. (இடம்: நாராயணபுரம் கண்மாய், காஞ்சிபுரம்).| படங்கள்: நா.தங்கரத்தினம்.
12 / 27
13 / 27
14 / 27
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. | படம்: நா.தங்கரத்தினம்.
15 / 27
மதுரை ஒருங்கிணைந்த மலர் சந்தையில் ஆடி அமாவாசையால் மல்லிப்பூ விலை உயர்வு. | படம்: நா.தங்கரத்தினம்
16 / 27
17 / 27
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.சத்தியசீலன்
18 / 27
19 / 27
20 / 27
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அவரது வீட்டின் முன்பு காத்திருந்த திமுக தொண்டர்கள். | படம்: எஸ்.சத்தியசீலன்
21 / 27
சேலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் நகர்புற சுகாதார செவிலியர்களுக்கு தாய் சேய் நல கண்காணிப்பு பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு உபகரணங்களை வழங்கினார். | படம்: எஸ்.குரு பிரசாத்
22 / 27
சேலத்தில் ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. தேங்காயின் உள்ளே பச்சரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை இட்டு, அழிஞ்சி குச்சியில் பொருத்தி, நெருப்பில் சுட்டு அதை தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். தேர்வீதியில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை ஏராளமானோர் தேர்ந்தெடுத்து வாங்கிச்சென்றனர். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
23 / 27
சேலம் சின்னக்கடை வீதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழிஞ்சி மரக் குச்சிகளை தேர்வு செய்யும் மக்கள்.
24 / 27
மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் பாதள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை நீண்ட நாள் ஆகியும் சரி செய்யப்படாத நிலையில் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதால் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள். | படம்: நா. தங்கரத்தினம்.
25 / 27
26 / 27
மதுரை நத்தம் சாலையில் புதிதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை முன் நின்று குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
27 / 27
நூறு நாள் வேலைத் திட்டத்தில் ‘பிப்’ கணக்கெடுப்பு, ஊதா அட்டை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களை உள்ளே விடாமல் போலீஸார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. | படம்: ஜெகநாதன்