கோவை வேளாண் கண்காட்சி முதல் கலைஞர் நூலக திறப்பு விழா ஏற்பாடு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 14, 2023
Published on : 14 Jul 2023 18:33 pm
1 / 19
வேலூர் மாநகராட்சி கொசப்பேட்டை பகுதியில் ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் இரத உற்சவ திருவிழாவையொட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்து 208 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால் ஊர்வலம் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 19
மதுரை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலகம் முன்பாக மண்டல அளவிலான கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகளுக்கு பொருந்தாத தணிக்கை முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 19
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு நூலக திறப்பு விழா தொடர்பான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 19
மதுரை தெற்குமாசி வீதி மஞ்சன கார தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ‘சந்திரயான் 3’ விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவிகளுக்கு திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 19
அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கி பணிகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்க கோரி மதுரையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 19
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 2023 வேளாண் அக்ரி இன்டெக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலஷ்மி உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்
7 / 19
ரூ 6 லட்சம் மதிப்புள்ள சவுத் ஆப்பிரிக்கன் வகை ஆடு. | படம்: ஜெ.மனோகரன்
8 / 19
கண்காட்சியில் இடம்பெற்ற ராஜஸ்தான் வகை மாடுகள். | படம்: ஜெ .மனோகரன்
9 / 19
10 / 19
தானியங்கி மாட்டு பால் கறக்கும் இயந்திரம். | படம்: ஜெ.மனோகரன்
11 / 19
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெறுகிறது. | படம்: கோபாலகிருஷ்ணன்
12 / 19
13 / 19
14 / 19
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தின் வெளியே குவிந்த பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் சின்னமலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்: எஸ்.சத்தியசீலன்
15 / 19
மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பார்வையாளர்கள் பார்ப்பதற்காக 12 இடங்களில் காணொலி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 19
17 / 19
18 / 19
19 / 19