1 / 37
கோவை மாவட்டம், பச்சாபாளையத்தில் ஆவின் பால் பண்ணையில், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று ஆய்வு செய்தார். | படம்: ஜெ.மனோகரன்
2 / 37
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் செல்லும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி பள்ளி செவிலியர்கள். | படம்: ஜெ.மனோகரன்
3 / 37
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4 / 37
தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 37
வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலம் 38-வது வார்டுக்கு உட்பட்ட கலாஸ்பாளையம் பகுதியில் வேலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமல் சிமெண்ட் மூட்டை, டேங்க், மரப்பலகை உள்ளிட்ட கட்டிட கட்டுமான உபகரணங்கள் வைக்கும் கிடங்காக உள்ளது. | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 37
7 / 37
8 / 37
9 / 37
புதுச்சேரி என்.ஆர் விளையாட்டு சங்கம் சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு மாநிலம் அளவிலான டென்னிஸ் விளையாட்டு போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்
10 / 37
புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டிடப்பணிகளை விரைவாக முடிக்க கோரி பஸ் நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 37
12 / 37
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி பணி வழங்குவதாக உறுதியளித்ததை நிறைவேற்றகோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.| படம்: எம்.சாம்ராஜ்
13 / 37
மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழா நடைபெற இருப்பதால் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் கூட்ட இடத்தை பார்வையிட்டார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 37
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வர இருப்பதால் மதுரை கேகே நகரில் தயாராகும் தற்காலிக சாலைகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 37
பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலன் பாப்பையா மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 20 லட்சத்தை காசோலையை ஆணையாளர் பிரவீன் குமாரிடம் வழங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 37
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு புத்தகக் கண்காட்சி விளம்பர போஸ்டர்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஒட்டினார். அருகில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார். | படம்: ஆர்.வெங்கடேஷ்
17 / 37
தஞ்சாவூர் எம்ஜிஆர் நகர் மக்களுக்குப் பட்டா மாற்றம் செய்து தர வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வீட்டு பாத்திரங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் எம்ஜிஆர் நகர் மக்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
18 / 37
மதுரை சத்திரப்பட்டியில் அப்துல் அஜீஸ் என்பவர் அரிய வகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள பறவைகளை காப்பதற்காக ஒரு ஏக்கரில் பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 37
20 / 37
21 / 37
22 / 37
23 / 37
24 / 37
25 / 37
26 / 37
27 / 37
வேலூர் மாநகராட்சி சாயிநாதபுரம் பகுதி வி.பி.தங்கவேல் முதலி தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வலை போல் உள்ளது. இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் இப்பகுதியை கடந்து செல்கின்றர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பணி சீக்கிரம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கு எச்சரிக்கை தடுப்பு வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
28 / 37
குளியல் குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள நிழல் குடையில் ஒய்வெடுக்கும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் கல்யாணி யானை. படம்: ஜெ.மனோகரன்
29 / 37
மதுரை ராஜாஜி பூங்காவில் குப்பைகள் தேங்கி சுகாதாரமும் இல்லை. கொடுத்த நுழைவுக்கட்டத்திற்கு பூங்காவினுள் குழந்தைகளை கவரும் விளையாட்டு உபகரணங்களும் இல்லை. | படம்: ஆண்டனி செல்வராஜ்
30 / 37
31 / 37
32 / 37
லாட்டரி சீட்டு விற்பனையை கண்டித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நபர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
33 / 37
சென்னை எழும்பூரில் பிரமாண்டமாக கட்டபட்டுள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் முடிந்து திறக்கப்ட்டது. இதற்காக வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. | படம்: எஸ்.சத்தியசீலன்
34 / 37
வேலூரில் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக தோட்டப்பாளையம் பகுதி காட்பாடி சாலையில் ஓடிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
35 / 37
36 / 37
37 / 37