Published on : 10 Jul 2023 20:48 pm

அதிமுகவினர் வழங்கிய இலவச தக்காளி முதல் மதுரை மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 10, 2023

Published on : 10 Jul 2023 20:48 pm

1 / 22
மதுரை மத்திய சிறை சாலை வளாகத்தில் சிறைவாசிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்த சிறை துறை அதிகாரி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 22
மழையின் காரணமாக மதுரை ஆரப்பாளையம் பகுதிக்கு செல்லும் கருடர் பாலத்தில் தண்ணீர் உறிஞ்சி எடுக்கும் மோட்டார் பழுது அடைந்ததால் தேங்கியிருக்கும் தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் அகற்றினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 22
4 / 22
கோவை அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு புத்துணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வான்வெளி உபகரணங்கள் தயாரிக்கும் குழுமத்தின் தலைவர் ஏ.எம்.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். | படம்: ஜெ.மனோகரன்
5 / 22
வேலூர் ஓட்டேரி ஏரிக்கரையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கு அருகில் மலைபோல் குவிந்துள்ள மக்காத குப்பைகள். | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 22
7 / 22
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட கீழ்மோட்டூரில் 40 லட்சம் மதிப்பில் இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பேசினார்.| படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 22
9 / 22
மதுரையின் நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டின் நினைவு நூலக திறப்பு விழா நடக்க சில தினங்களே உள்ள நிலையில் ஆயுதப்படை மைதானத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மிக வேகமாக நடைபெற்று வரும் பணிகள்.| படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 22
11 / 22
12 / 22
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கம் சார்பில் மதுரையில் இன்று மனு கொடுக்கும் போராட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. | படம்: ஜனநாயகசெல்வம்
13 / 22
சேலத்தில் உணவு பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதாக குற்றம்சாட்டி, அதிமுக-வினர் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கினர். | படம்: வி.ஸ்ரீனிவாசன்
14 / 22
திருப்பத்தூர் அருகே புதிய கற்கால மக்கள்பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுப்பு.சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தகவல். | படம்: சரவணன்
15 / 22
தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள ' நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா - மாடர்ன் தியேட்டர்ஸ் வரை சுமார் 8 கிலோமீட்டர் மக்கள் நடை பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன். | படம்: எஸ். குரு பிரசாத்
16 / 22
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் சுப்பிரமணியன் மாணவ,மாணவிகளுக்கு மருத்துவர் பட்டங்களை வழங்கினார். உடன் ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி உள்ளிட்டோர். | படம்: எஸ்.குரு பிரசாத்
17 / 22
18 / 22
மதுரை பழங்காநத்தம் பகுதியில் வயல்வெளி போல் சேறும் சகதியுமாக விபத்து ஏற்படும் வகையில் காணப்படும் மதுரை திருபரம்குன்றம் சாலை. | படம்: நா. தங்கரத்தினம்.
19 / 22
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை. | படம்: ஆர்.அசோக்
20 / 22
21 / 22
22 / 22

Recently Added

More From This Category

x