1 / 28
வேலூர் மாநகராட்சியின் 32-வது வார்டுக்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட உருது தொடக்கப்பள்ளி கட்டிடத்தை மேயர் சுஜாதா ஆனந்தகுமார் திறந்து வைத்தார். அருகில், சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் சாஜிதா உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 28
3 / 28
வேலூர் சங்கரன்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் காமராஜர் முதல் குறுக்கு தெருவில் குப்பைகளை கொட்டி பிரிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் அவ்வழியே செல்லமுடியாத நிலை உள்ளது. பல வருடங்களாக இவ்வாறு நடைபெறுவதை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 28
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விபத்து இழப்பீடுக்காக தொகை ரூ.32 லட்ச ரூபாயை முதன்மை மாவட்ட நீதிபதி சிவ கடாட்சம் பாதிக்கப்பட்ட ராணிக்கு வழங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 28
மதுரை பழங்காநத்தம் பகுதியில் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 28
வயலில் பயிர்களுக்குத் தீங்கு செய்யக்கூடிய பூச்சிகளை உண்பதற்காக வாத்துக்களை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அந்த வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால், வயல்களில் அதிகளவில் வாத்துக்களை விவசாயிகள் மேய்ச்சலுக்கு விடுகிறார்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
7 / 28
கோவையில் முதல்முறையாக இந்துஸ்தான் கல்லூரியில் செல்லப்பிராணிகளுக்கான சர்வதேச பூனைகள் மற்றும் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. | படம்: ஜெ.மனோகரன்
8 / 28
புதுச்சேரி பெரிய மார்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர். | படம்: எம்.சாம்ராஜ்
9 / 28
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மீது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சிலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 28
புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன் சூறை காற்றுடன் பெய்த மழையினால் பாரதி பூங்காவினுள் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 28
பளபளப்பான சமணக்குகைகள், 2 ஆயிரம் பழமையான பரம்பு கண்மாய் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்களை இன்று மதுரையில் நடந்த பாரம்பரிய நடைபயணத்தில் கண்டறிந்தனர். | படம்: ஜனநாயக செல்வம்
12 / 28
13 / 28
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில் முதல் முறையாக தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.| படம்: கே.சுரேஷ்
14 / 28
15 / 28
16 / 28
17 / 28
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல்துறை இணை ஆணையர் சிவானந்தம் மீண்டும் பொறுப்பேற்றதை அடுத்து, அகழாய்வு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை தங்க அணிகலன், சுடுமண் காளை உட்பட 183 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. | படம்: ஜெகநாதன்
18 / 28
19 / 28
20 / 28
தஞ்சாவூர் நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டிவைடர்கள் சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் தொடர்ந்து இடிக்கப்படுவதாலும், எடை குறைவாக உள்ளதாலும் அது வைக்கப்பட்டதற்கான நிலை மாறி போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது.
21 / 28
பல இடங்களில் டிவைடர்கள் உடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. தஞ்சாவூர் நகரின் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் ரயில் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் டிவைடர்கள் சாலையின் மையத்தில் அல்லாமல் கோணலாகவும் உடைந்தபடியும் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. | படம்:ஆர்.வெங்கடேஷ்
22 / 28
வேலூரில் இன்று மாலை பொழுதில் பலத்த காற்றுடன் சிறிது நேரம் பெய்த மழையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
23 / 28
24 / 28
25 / 28
26 / 28
27 / 28
28 / 28