டிஐஜி விஜயகுமாருக்கு அஞ்சலி முதல் காங். ஆர்ப்பாட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 7, 2023
Published on : 07 Jul 2023 19:26 pm
1 / 9
மேட்டூர் காவிரி பாலத்தில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. | படம்: சக்திவேல்
2 / 9
புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை பெங்களுரில் இருந்து மீட்டு வந்த காவல்துறையினர் மீட்கப்பட்ட குழந்தையை பார்வையிட்ட எஸ்.பி சுவாதி சிங் அருகில் இன்ஸ்பெக்டர் நாகராஜ். | படம்: சாம்ராஜ்
3 / 9
புதுச்சேரி வாழைக்குளம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் இல்லாமல் காலியாக கிடக்கிறது. | படம்: எம்.சாம்ராஜ்
4 / 9
ராகுல் காந்தியின் எம்பி பதவி மேல் முறையிட்டியில் ரத்து செய்யப்பட்டதால் மதுரை தமுக்கம் மைதானம் நேரு சிலை அருகே மதுரை காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 9
வேலூரில் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் வைட்டமின்கள் அதிகம் உள்ள ரம்பூட்டான் பழம். கிலோ ரூ. 350 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 9
புதுச்சேரியில் நடைபெற்ற மாபெரும் கடன் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு கடன் தொகையை வழங்கிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அருகில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம். | படம்: எம்.சாம்ராஜ்
7 / 9
மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
8 / 9
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் முகாம் அலுவலகத்தில் பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அதிகாரிகள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். | படங்கள்: ஜெ. மனோகரன்
9 / 9