Published on : 06 Jul 2023 19:03 pm

மெரினா சர்வீஸ் சாலை மூடல் முதல் காவலரின் உன்னத செயல் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 6, 2023

Published on : 06 Jul 2023 19:03 pm

1 / 17
மதுரை செல்லூர் பகுதியில் வனத்துறையினரின் விழிப்புணர்வு அறிவிப்பால், வீடுகளில் அனுமதியின்றி கிளிகள் வளர்த்தவர்கள் இன்று 23 கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். | படம்: ஜனநாயக செல்வம்
2 / 17
எவ்வித பிரதிபலனுமின்றி ஏழை மாணவ, மாணவிகளுக்கு மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக்காவலர் ஏ.சுந்தர ராஜா கால்பந்தாட்ட பயிற்சி அளித்து வருகிறார். இவர் மூலம் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.| படம்: என்.சன்னாசி
3 / 17
சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலக கட்டிடத்தில் திடீரென இடிந்து விழுந்த சிமென்ட் சிலாப். ஊழியர்கள் அலறியபடி ஓட்டம். | படம்: ஜெகநாதன்
4 / 17
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது. | படம்: ராஜா
5 / 17
தரும்புரியில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் பச்சிளங் குழந்தைகளுடன் வீடு திரும்ப 2 குளிர்சாதன வாகனங்களை தொகுதி நிதி மூலம் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் வழங்கியுள்ளார். | படம்: ராஜா
6 / 17
வேலூரில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் பங்குதாரர் ஜனார்த்தனுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 17
மதுரை பாண்டி கோவில் அருகே சுற்றுச்சாலை மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் மற்றும் பாண்டிகோவில் சந்திப்பு, சிவகங்கை சுற்றுச்சாலை சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அப்பகுதியில் பயத்துடன் செல்லும் வகையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. | படம்: நா.தங்கரத்தினம்.
8 / 17
9 / 17
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் முன் பள்ளி மற்றும் கடைகள் நிறைந்த பகுதியில் செல்லும் மழைநீர் கால்வாய் முறையாக சுத்தப்படுத்த படாமல் பிளாஸ்டிக் குப்பைகள் கழிவுநீர் சேர்ந்து அப்பகுதியில் மாசு ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. | படம்: நா. தங்கரத்தினம்.
10 / 17
11 / 17
மதுரை தத்தனேரி பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகளால் சாலை ஆங்காங்கே குறுகி அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. | படம்: நா. தங்கரத்தினம்.
12 / 17
சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரம்பரிய கட்டிடமான விவேகானந்தர் இல்லத்தில் வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. | படம்: எஸ்.சத்தியசீலன்.
13 / 17
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்து வரும் மெட்ரோ பணியின் காரணமாக அந்தப் பகுதியில் சர்வீஸ் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. | படம்: எஸ்.சத்தியசீலன்.
14 / 17
சேலத்தில் அதிகாலை முதல் மதியம் வரை இடைவிடாது சாரல் மழை பெய்தது. மரவனேரி அருகே மழையில் நனையாமல் இருக்க குழந்தைகளுக்கு குடைபிடித்தவாறு பள்ளிக்கு அழைத்துச்சென்ற பெற்றோர்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்
15 / 17
புதுச்சேரி திருக்கனுார் செல்லும் சாலை குமாரப்பளையம் மேம்பாலம் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்கும் கர்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் அவதியடைந்துள்ளனர். சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: எம்.சாம்ராஜ்
16 / 17
17 / 17
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பழைய பஸ் நிலையத்திலிருந்து கோரிக்கை பேரணி நடத்திய தொழிலாளர்கள். | படம்: எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x