1 / 18
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் தேரோட்டம் நடைபெற்றது. | படம்: ஜெகநாதன்
2 / 18
ஆதார் அட்டையை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியதையடுத்து, காரைக்குடி நகராட்சி ஆதார் மையத்தில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள். | படம்: ஜெகநாதன்
3 / 18
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிரமாண்ட மல்லிகை பூப்பல்லக்கு சேவுகப்பெருமாள் அய்யனார் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். | படம்: ஜெகநாதன்
4 / 18
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி கலந்து கொண்டார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 18
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 18
கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர். | படம்: ஜெ.மனோகரன்
7 / 18
வேலூர் அருகே அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து. | படம்: வி.எம்.மணிநாதன்
8 / 18
9 / 18
வேலூரில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற உழவர் தின பேரணி. இதில், திராளான விவசாயிகள் கலந்துகொண்டு பேரணியாக சென்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 18
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் 39 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. | படம்: எம்.சாம்ராஜ்
11 / 18
12 / 18
தூய்மை இந்தியா வாரத்தையொட்டி சேலத்தில் தேசிய புள்ளியியல் துறை துணை மண்டல அலுவலகம் சார்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ராமகிருஷ்ணா பூங்காவில் மூத்த புள்ளியியல் அலுவலர் அர்ஜுனன் தலைமையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அலுவலர்கள். | படம்: எஸ்.குருபிரசாத்
13 / 18
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடிப்பண்டிகையையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
14 / 18
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை நடடைபெற உள்ளது. இதற்காக புதிய செயற்கை இழையிலான ஆடுகளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. | படம்: எஸ்.சத்தியசீலன்
15 / 18
‘விழிப்புணர்வு ஓவியங்கள் சுவரை மட்டுமே அழகாக்க முடியும் சுற்றுசூழலை அல்ல’ என்பதற்கு இதுவே சான்று. திருவல்லிக்கேணி பாரதி சாலையில் தூய்மை குறித்து வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ஓவியத்துக்கு அருகே வீசப்படிருந்த பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் தூய்மை பணியாளர். |
படம்: எஸ்.சத்தியசீலன்.
16 / 18
பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், இந்திரா காந்தி உயர் ஆராய்ச்சி மையம் சார்பில் பிளாஸ்மா கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் தொடங்கியது. கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பார்வையிட்டனர். இக்கண்காட்சி வருகிற 7-ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. | படம்: ம.பிரபு.
17 / 18
18 / 18