1 / 24
வேலூர் தோட்டப்பாளையம் பகுதி காட்பாடி சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதியதில் இரும்பு தடுப்பு வளைந்து ஆபத்தான நிலையில் சாலையில் நீட்டியாறு உள்ளது. போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதியில் வாகன ஓட்டிகள் அதன்மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக அகற்றி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 24
3 / 24
வேலூர் அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்-ரே வாகனத்தின் கதவு உடைந்துள்ளது. அதற்கு கயிறு கட்டி மருத்துவமனை வளாகத்தில் அலட்சியமாக நிறுத்தி வைத்து உள்ளனர். வாகனத்தின் உள்ளே உள்ள எக்ஸ்-ரே கருவி, மானிட்டர் பயன்படுத்தாமல் பழுதாகி வருகிறது. இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 24
5 / 24
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில், மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 24
மதுரை கல்லூரி வாரியத்துக்கு உட்பட்ட மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு 125 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 24
8 / 24
9 / 24
புதுச்சேரி நகர பகுதியான சவரிராயலு வீதியில் குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி காணப்படும் சாலை. | படம்: எம்.சாம்ராஜ்
10 / 24
புதுச்சேரியில் குண்டும் குழியுமாக உள்ள சவரிராயலு வீதி. | படம்: எம்.சாம்ராஜ்
11 / 24
12 / 24
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நல்ல நிலையில் உள்ள செயின்ட் தெரசா வீதியை மறுபடியும் அதன் மேல் கம்பிகள் அமைத்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதனை பார்த்து சாலையில் செல்லும் பொதுமக்கள் கோபமடைய செய்கிறது. | படம்: எம். சாம்ராஜ்
13 / 24
புதுச்சேரி கோவில் நிலத்தை மோசடி செய்த பாஜக எம்எல்ஏ ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தெய்வத் தமிழ் பேரவையினர். | படம்: எம். சாம்ராஜ்
14 / 24
15 / 24
புதுச்சேரி மத்திய நீதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகையொட்டி செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய்.சரவணக்குமார். தலைமைச்செயலர் ராஜிவ்வர்மா மற்றும் துறை செயலர்கள் கலந்து கொண்டனர். | படம்: வி. எம்.மணிநாதன்
16 / 24
புதுச்சேரி மாநிலம் யாணம் பகுதியில் அரசு அனுமதியில்லாமல் நடந்து வரும் கேளிக்கை விடுதியை செய்தியாளர்கள் சந்திப்பில் காண்பிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம். | படம்: எம். சாம்ராஜ்
17 / 24
வேலூரில் இன்று மாலை பொழுதில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தை சூழ்ந்திருந்த கருமேகங்கள். சிறு சிறு மழை தூறலுடன் கலைந்து சென்றன. | படம்: வி.எம்.மணிநாதன்.
18 / 24
19 / 24
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி. அருகில், ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்
20 / 24
அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் ஜெர்மன் நாட்டின் காந்தியின் மையத்தின் தலைவர் கிறிஸ்டின் பிரிட்டோ சிறப்பு உரையாற்றினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
21 / 24
தக்காளி விலை உயர்வால் நேற்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஒன்று இரண்டு ட்ரே மட்டுமே விற்பனை செய்யப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்தனர். அதனால் பண்ணை பசுமை கடைகளில் மக்கள் கூட்டமாக தக்காளி வாங்க சென்றனர். | படம்: ம.பிரபு
22 / 24
23 / 24
மதுரை வைகை ஆற்றின் இருபுறமும் உயரமாக கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
24 / 24
மதுரை மாநகராட்சி மத்திய மண்டலம் - 3 அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து புகார் மனுக்களை பெற்றார். உடன் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் துணை மேயர் தி.நாகராஜன். | படம்: நா. தங்கரத்தினம்