1 / 36
மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியில் 2023 -ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கின. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 36
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தாயக மக்கள் கட்சி சார்பாக 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 36
மதுரையில் 137 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பாலம் தற்போது பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 36
5 / 36
வேலூர் அடுத்த ஊசூரில் கோடரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த கந்தசாமி என்பவர். | படம்: வி.எம்.மணிநாதன்
6 / 36
7 / 36
வேலூர் அடுத்த ஊசூரில் கோடாரியால் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம். | படம்: வி.எம்.மணிநாதன்
8 / 36
9 / 36
10 / 36
பொதுமக்கள் காணாமல் போன தங்களின் செல்போன்கள் குறித்த புகார்களை அளிக்கும் வகையிலான செல் டிராக்கர் வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் அறிமுகப்படுத்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
11 / 36
புதுச்சேரி வில்லியனுார் பெருந்தேவியார் சமேத தென்கலை வரத ராஜபெருமாள் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை இழுந்தனர். | படம்: எம். சாம்ராஜ்
12 / 36
புதுச்சேரில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் சட்டசபையில் வாயிலில் விழுந்த மரத்தால் சுற்றியுள்ள கம்பி வேலி சேதமடைந்தது. அதனை சரிசெய்யும் பணியில் பொதுப்பத்துறையினர். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 36
புதுச்சேரி சென்டாக் விளையாட்டு வீரா்களுக்கான இடஓதுக்கீட்டில் டென்னிகாய்ட் விளையாட்டை நீக்கியதை கண்டித்து கல்வித்துறை அலுவலகத்தில் முற்றுகையிட்ட விளையாட்டு வீரா்கள். | படம்: எம்.சாம்ராஜ்
14 / 36
புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் சத்யா சிறப்புப் பள்ளிக்கும் இடையேயான ஆட்டிசம், பெருமூளை வாதம் மற்றும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு சேவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது. அருகில் அரசு செயலர் உதயகுமார், சுகாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா ஆகியோர் உடன் உள்ளனர். | படம்: எம்.சாம்ராஜ்
15 / 36
புதுச்சேரி வில்லியனுார் பெருந்தேவியார்சமேத தென்கலை வரத ராஜபெருமாள் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த பெருந்தேவியார் சமேத தென்கலை வரத ராஜபெருமாள். | படம்: எம்.சாம்ராஜ்
16 / 36
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்தனர். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
17 / 36
அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியதையொட்டி. கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு சீனியர் மாணவிகள் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். | படம்: ஜெ.மனோகரன்
18 / 36
19 / 36
சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. முதல் நாள் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் செண்பகலட்சுமி இனிப்பு மற்றும் ரோஜா மலர்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றார். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
20 / 36
21 / 36
22 / 36
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அப்போது கல்லூரி வந்த மாணவிகளைப் பேராசிரியைகள் கைகுலுக்கி வரவேற்றனர்.
23 / 36
24 / 36
25 / 36
குரு பூர்ணிமாவை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தங்களின் ஆசிரியைகளுக்கு பாதபூஜை செய்து வணங்கிய மாணவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
26 / 36
27 / 36
28 / 36
29 / 36
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேரடிப் படிகளில் 5 லட்சம் தேங்காய்களை வீசி உடைத்தனர்.
30 / 36
31 / 36
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கியது. சென்னை ராணி மேரிக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகளை வரவேற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவிகள். படங்கள்: ம.பிரபு
32 / 36
33 / 36
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது | படம்: எஸ்.சத்தியசீலன்
34 / 36
35 / 36
36 / 36