‘மாமன்னன்’ எதிர்ப்பு போராட்டம் முதல் நத்தம் பறக்கும் பாலம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 29, 2023
Published on : 29 Jun 2023 18:19 pm
1 / 17
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில், தமிழகத்தின் திருப்பதி எனப் போற்றப்படும் திருவிண்ணகரப்பன் பூமிதேவி நாச்சியார் சமதே வேங்கடாசலபதி கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு, வெகு விமர்சையாக இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதைக் காண வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
2 / 17
வேலூர் காகிதப் பட்டரையில் உள்ள பணிபுரியும் பெண்கள் விடுதி பயன்பாடு இல்லாதாதல் முட்புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மாட்டுத்தொழுவமாகவும் பாழடைந்து வருகிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 17
4 / 17
5 / 17
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொழுகை செய்பவர்களுக்கான தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனை வடமாநில் தொழிலாளர்கள் வாங்கிச் சென்றனர். | படம்: ஜெ.மனோகரன்
6 / 17
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள். | படம்: ஜெ.மனோகரன்
7 / 17
மதுரை செல்லூர் கோபுரம் டாக்கீஸ் முன்பாக திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக் கோரி முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்துமீறி போராடியவர்களை போலீஸார் கைது செய்தனர்| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 17
மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் நீண்ட நாள் ஆகியும் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் ஆறு போல் ஓடி மழைநீர் கால்வாய் வழியாக வண்டியூர் கண்மாயில் கலக்கிறது. | படம்: நா.தங்கரத்தினம்.
9 / 17
10 / 17
மதுரை அண்ணாநகர் 80 அடி சாலையில் பாதல சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை நீண்ட நாள் ஆகியும் சரி செய்யப்படாத நிலையில் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதால் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள். | படம்: நா.தங்கரத்தினம்.
11 / 17
மதுரை நத்தம் பறக்கும் பாலம் அருகே உள்ள நாராயணபுரம் கண்மாயை சுற்றி அமைக்கப்பட்ட சிறுவர்கள் பூங்காவுடன் கூடிய நடைபாதையில் குழந்தைகளுடன் விளையாடவும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் குவியும் பொதுமக்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது . | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 17
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தியதையடுத்து கடைகள் முடி காணப்பட்ட குபேர் அங்காடி | படம்: எம்.சாம்ராஜ்
17 / 17
மேகமூட்டத்துடன் இதமான வானிலை @ கோவை நஞ்சப்பா சாலை பார்க் கேட். | படம்: ஜெ.மனோகரன்