1 / 18
போலிப் பத்திரம் மூலம் கோயில் சொத்தை பத்திரப் பதிவு செய்த பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகையிட சென்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். | படம்: எம்.சாம்ராஜ்
2 / 18
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் சாலை வசதிகளை செய்து தரக்கோரியும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம் நடத்திய திமுகவினர். | படம்: எம். சாம்ராஜ்
3 / 18
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் சாலை வசதிகளை செய்து தரக்கோரியும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும்
ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட திமுக அமைப்பாளர் சிவா தலைமையிலான திமுகவினர். | படம்: எம்.சாம்ராஜ்
4 / 18
அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் இயற்றக் கோரி, புதுச்சேரி சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார். | படம்: எம். சாம்ராஜ்
5 / 18
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் சார்பாக மணிப்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிறிஸ்துவர்கள் படுகொலையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 18
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 18
மதுரை ரயில்வே நிலையத்தில் மெட்ரோ ரயில் துறை துணை இயக்குனர் அர்ச்சுனன் மெட்ரோ ரயிலுக்கான திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 18
வேலூர் மாவட்டம் குகையநல்லூரில் சரத்குமார் என்பவரின் மரண வாக்குமூலத்தை மறைத்து குற்றவாளியை பாதுகாப்பதாக கூறியும், காட்பாடி டிஎஸ்பி நடவடிக்கையை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தப்பு அடித்தப்படி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 18
கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ஜுனன் | படம்: ஜெ.மனோகரன்
10 / 18
11 / 18
12 / 18
தொங்கும் கூடு: வானில் பறந்து, பூமியில் இரை தேடினாலும் ஓய்வெடுக்கவும், உறங்கவும் பறவைகளுக்கு ஒரு கூடு வேண்டும். பனை மர ஓலையின் நுனியைக் கிழித்து தொங்கும் கூட்டை, தாம் தங்கும் வீட்டை பறவைகள் தலைகீழாய் தொங்கி தன் அலகால் பின்னுவது அழகோ அழகு இயற்கையின் பேரழகு. | படம்: நா.தங்கரத்தினம்.
13 / 18
14 / 18
15 / 18
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற கோடை விழாவில் சக்ரி நடனம் ஆடிய ராஜஸ்தான் மாநில கலைஞர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
16 / 18
தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள போக்குவரத்து போலீஸாரி்ன் நிழற்குடை காட்சிப் பொருளாகி, சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும், கேபிள் வயர்களை கட்டும் இடமாகவும் மாறியுள்ளது. | படம்: ஆர்.வெங்கடேஷ்
17 / 18
தஞ்சாவூர் அருகே பூதலூர் பகுதியில் தூர் வாரப்பட்ட வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. அங்கு மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது. | படங்கள்: ஆர். வெங்கடேஷ்
18 / 18