Published on : 24 Jun 2023 18:54 pm

புதுச்சேரி கடல் அரிப்பு முதல் ஜலகண்டேஸ்வரர் கோயில் நிகழ்வு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 24, 2023

Published on : 24 Jun 2023 18:54 pm

1 / 19
தஞ்சாவூர் புறவழிச்சாலையில் நாகப்பட்டினம் ரயில் பாதைக்கு மேலே உள்ள பாலத்தின் அருகில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்கள். | படம்: ஆர். வெங்கடேஷ்
2 / 19
தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூரில் குறுவை சாகுபடிக்காக வயலில் டிராக்டர் மூலம் உழவு மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. | படம்: ஆர். வெங்கடேஷ்
3 / 19
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கான கடனுதவியை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார். உடன் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்ட பலர். | படம்: ஆர். வெங்கடேஷ்
4 / 19
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கான கடனுதவியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார். | படம்: ஆர். வெங்கடேஷ்
5 / 19
6 / 19
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கான கடனுதவியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார். | படம்: ஆர். வெங்கடேஷ்
7 / 19
புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பினால் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தென்னை மரங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன. | படம்: எம்.சாம்ராஜ்
8 / 19
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகர மாவட்ட செயலாளர் கோபி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் பாசறை பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி, குணசேகர், மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர், பகுதி செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 19
10 / 19
கோவை ராஜவீதியில் ஹரே கிருஷ்ணா பக்தர்களால் மிகுந்த உற்சாகத்துடன் இஸ்கான் அமைப்பினர்கள் சார்பில் நடைபெற்ற இஸ்கான் ரத யாத்திரை. | படம்: ஜெ. மனோகரன்
11 / 19
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறவுள்ளதையொட்டி, கோயில் கோபுரங்கள், வளாகம் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. | படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 19
மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைவர் ஜி.கே.வாசன். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 19
புதுச்சேரி பெரியகடை காவல்நிலையம் இருந்த இடம் தற்போது வாகனம் நிறுத்தும் இடமாகவும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுகாதரமற்று குப்பைகளை கொட்டும் இடமாகவும் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாகவும் உள்ளது. | படம்: எம்.சாம்ராஜ்
14 / 19
புதுச்சேரி பெரியகடை காவல்நிலையம் மற்றும் சென்ட்ரல் ஜெயில் கட்டிடத்தில் மழை மற்றும் வெயிலுக்கு மேற்கூறை இல்லாமல் நிற்கும் வாகனங்கள். | படம்: எம். சாம்ராஜ்
15 / 19
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் கோயில் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 19
17 / 19
18 / 19
கோவை பிஆர்எஸ் மைதானத்தில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாநகர ஆயுதப்படை காவலர்கள் | படம்: ஜெ. மனோகரன்
19 / 19

Recently Added

More From This Category

x