1 / 38
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் அகலப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கையாக இருக்கிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 38
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் பூட்டை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 38
தமிழக அரசின் 500 மதுபான கடைகள் அடைக்கப்படும் என்ற உத்தரவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மற்றும் அண்ணா நகர் அருகே கூவிக்காரன் சாலை பகுதியில் உள்ள மதுபான கடை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 38
5 / 38
6 / 38
7 / 38
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள சாத்தையாறு அணை | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 38
9 / 38
மதுரை செல்லூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி ஆகியோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 38
கோடையிலும் 2 வது முறையாக நிரம்பிய வண்டியூர் தெப்பக்குளத்தில் தற்போது கோடை வெயிலால் நீர்மட்டம் குறைந்து பாசி படர்ந்து காணப்படுகிறது. | படம்: நா. தங்கரத்தினம்
11 / 38
மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பழமையான திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் முறையான பராமரிப்பு இல்லாமல் நீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. | படம்: நா. தங்கரத்தினம்.
12 / 38
13 / 38
14 / 38
மதுரை - தூத்துக்குடி சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் மருத்துவ கல்லூரி ஐடா ஸ்கட்டர் அரங்கில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க 6ஆவது மாநில மாநாடு மற்றும் 41-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நுகர்வோர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கலந்துகொண்டு பெட்ரோலிய உபகரணங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். உடன் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் க.ப.முரளி. | படம்: நா.தங்கரத்தினம்.
15 / 38
16 / 38
17 / 38
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு டெண்டர் விண்ணப்பங்கள் மாநகராட்சி உதவி ஆணையர் சுப்பையா முன்னிலையில் திறக்கப்பட்டு கடைகள் ஏலம் விடப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்
18 / 38
மதுரை காந்தி மியூசியம் அருகே சு.வெங்கடேசன் எம்பி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த படிப்பக வளாகம். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
19 / 38
ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாக கோவை காந்தி பார்க் முத்தண்ணன் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கொரில்லா குரங்கு பொம்மை. | படம்: ஜெ.மனோகரன்
20 / 38
21 / 38
சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவதூறாக பேசிய, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த திமுக பேச்சாளர் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த அதிமுகவினர். | படம்: வி.எம்.மணிநாதன்
22 / 38
புதுச்சேரி அரசு பணிக்காக ஊர்வலமாக வந்த பட்டதாரி பெண்கள் “எங்க படிப்பு எல்லாம் வேஸ்டா போச்சு. கடந்த ஐந்து வருடம் அரசு பணியோ அரசு தேர்வோ நடத்தவில்லை” என கதறி அழுதனர். | படம்: எம்.சாம்ராஜ்
23 / 38
சட்டமன்றத்தில் அறிவித்த ரூ.18 ஆயிரம் ஊதியத்தை வழங்ககோரி புதுச்சேரி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
24 / 38
புதுச்சேரி வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்; அருகில் அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏ ரமேஷ் | படம்: எம்.சாம்ராஜ்
25 / 38
புதுச்சேரி மூலக்குளம் சாலை அகலப்படுத்தும் பணி பாதிலேயே நிறுத்திவைப்பு; போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் மக்கள் | படம்: எம். சாம்ராஜ்
26 / 38
கோவையில் பெய்த மழையில் நனைந்தபடி செல்லும் வாகனங்கள் | படம்: ஜெ.மனோகரன்
27 / 38
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. | படம்: வி.எம்.மணிநாதன்.
28 / 38
தமிழக காவல்துறையில் பெண் காவலர்களின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியம் முன்பாக பெண் காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
29 / 38
கோவை நூறு அடி சாலையில் உள்ள பேருந்து நிழற்குடைகளில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உடைந்து, மின் வயர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. விபரீதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். | படம்: ஜெ.மனோகரன்
30 / 38
கோவை காந்திபுரம் 2-வது வீதியில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை. | படம்: ஜெ.மனோகரன்
31 / 38
சென்னையில் வியாழக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த கனமழை. | படங்கள்: ஆர்.ரவீந்திரன், அகிலேஷ் ஈஸ்வரன், ஆர்.ரகு, ஸ்ரீநாத்
32 / 38
33 / 38
34 / 38
35 / 38
36 / 38
37 / 38
38 / 38