1 / 31
உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை உக்கடம் பெரியக்குளகரையில் மக்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன். | படம்: ஜெ.மனோகரன்
2 / 31
3 / 31
4 / 31
அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 31
தமிழக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். | படம்: வி.எம்.மணிநாதன்
6 / 31
7 / 31
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சிறுபான்மையின மக்கள் நலக்குழு சார்பாக சிறுபான்மையினர் தொடக்கக் கல்வி பயில கல்வி உதவித் தொகை மசோதா நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 31
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும்
25-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் சின்ன ராஜகோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 31
10 / 31
புதுச்சேரி கலங்கரை விளக்க வளாகத்தில் நடைபெறும் 9- வது சர்வதேச யோகா தின விழாவில் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 31
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ராஜ்வ்காந்தி உள்விளையாட்டு திடலில் நடைபெற்ற யோகா தினவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், கல்வ கணபதி எம்.பி. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர். | படம்: எம். சாம்ராஜ்
12 / 31
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கைரை காந்தி திடல் மற்றும் கடற்கரை சாலையில் பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்ட தரை விரிப்புகள், விளம்பர பேனர்கள், நாற்காலி சேர்கள் என அனைத்தும் இரவு பெய்த மழையில் நனைந்தன. இந்த பகுதியில் காலையில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்தனர். இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு வேறு இடத்துக்கு குறைவான ஆட்களை வைத்து நடத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 31
புதுச்சேரியில் பணி நிறைவு பெற்று செல்லும் காவல்துறை டிஜிபி மனோஜ்குமார் லாலுக்கு இருபுறமும் காவல்துறையினர் நின்று மரியாதை செய்தனர். அதற்கு கையசைத்து நன்றி கூறி செல்கிறார் டிஜிபி மனோஜ்குமார் லால். | படம்: எம்.சாம்ராஜ்
14 / 31
புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலை சாலையோரம் வாகனம் நிறுத்திய இடத்தை விட்டுவிட்டு போடப்பட்ட சாலையால் ஓரங்களில் தீவு போல பள்ளங்கள் உருவாகி உள்ளன. | படம்: எம். சாம்ராஜ்
15 / 31
உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் அவரது மனைவி அஞ்சலிக்கு மதுரை காந்தி அருங்காட்சியத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 31
17 / 31
18 / 31
19 / 31
சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் கோட்டை சுற்றுசாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். | படம்: வி.எம்.மணிநாதன்
20 / 31
21 / 31
மதுரை உலகநேரி பகுதியில் இயற்கை வேளாண் பண்ணை அமைத்து இயற்கை விவசாயத்தில் அசத்தும் இளைஞர்கள். | படம்: நா. தங்கரத்தினம்.
22 / 31
இந்து தமிழ் திசை செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்ட மதுரை மாநகராட்சி முதல் நுழைவாயில். | படம்: நா. தங்கரத்தினம்.
23 / 31
மதுரை உலகநேரி பகுதியில் இயற்கை வேளாண் பண்ணை அமைத்து இயற்கை விவசாயத்தில் அசத்தும் இளைஞர்கள். | படம்: நா. தங்கரத்தினம்
24 / 31
25 / 31
26 / 31
27 / 31
28 / 31
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி கட்டிடக் கட்டுமான பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம், மாநகர மேயர் சண்.ராமநாதன் உட்படப் பலர் உள்ளனர். | படம்: ஆர். வெங்கடேஷ்
29 / 31
குண்டும் குழியுமாக காணப்படும் மதுரை அய்யாவு தேவர் நகர் சாலை. | படம்: நா.தங்கரத்தினம்.
30 / 31
சர்வதேச யோகா தினத்தையொட்டி சேலம் மரவனேரியில் உள்ள மாதவம் வளாகத்தில் தேசிய சேவா சமிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் யோகா பயிற்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
31 / 31
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் குட முழுக்கு விழா வரும்
25-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் பிரகாரத்தில் மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்