காரைக்கால் ஆசிரியர்கள் போராட்டம் முதல் புதுச்சேரியில் இடிந்து விழுந்த பழைய பாலம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 17, 2023
Published on : 17 Jun 2023 18:36 pm
1 / 23
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் பத்திர பதிவு துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 23
3 / 23
4 / 23
நம் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் பேயதேவன் தலைமையில் நடைபெற இருக்கும் உண்ணாவிரதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 23
6 / 23
வேலூர் சாரதி மாளிகையில் 3 மாடிகளாக கட்டப்பட்ட பொது கழிப்பறை 2 வருடங்களுக்கு மேலாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்
7 / 23
8 / 23
9 / 23
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. இதில், இளைஞர் நிதிக்குழு தலைவர் சத்தியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி குறித்து விளக்கினார். | படம்: வி.எம்.மணிநாதன்
10 / 23
11 / 23
நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்த கருத்தாளர் இந்திரா காந்தி. | படம்: வி.எம்.மணிநாதன்
12 / 23
மதுரை யாதவா பெண்கள் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பைக் காண விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசை வழங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 23
வைகை ஆற்றில் ஓடும் கழிவுநீர் | படம்: இ.ஜெகநாதன்
14 / 23
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தபெதிக சார்பில் பறை இசையுடன் நூறு கலைஞர்கள் உருவில் நடைபெற்ற பேரணி. | படம்: ஜெ.மனோகரன்
15 / 23
16 / 23
17 / 23
18 / 23
காரைக்கால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புதுச்சேரிக்கு பணி மாறுதல் கேட்டு சட்டசபை எதிரே உள்ள பாரதி பூங்காவில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் வெளியே வந்து சட்டசபையை முற்றுகையிடாமல் இருக்க பூங்காவின் வாயில் கதவுகளை பூட்டிய காவல்துறையினர். | படம்: எம்.சாம்ராஜ்
19 / 23
20 / 23
புதுச்சேரி பிஆர்டிசி அரசு பேருந்து பணிமனையில் பழுதான நிலையில் பேருந்துகள். பழுதை சரி செய்யாததால் மக்கி கிடக்கும் பல கோடி மதிப்பிலான ஏசி பேருந்துகள். | படம்: எம்.சாம்ராஜ்
21 / 23
22 / 23
புதுச்சேரி கடற்ரையில் ஏற்பட்ட மணல் அரிப்பு காரணமாக நடைபாதையில் பாறைகள் வெளியே காணப்படுகிறது. இதனால் கடலில் சுற்றுலாப் பயணிகள் இறங்காத விதமாகவும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. | படம்: எம்.சாம்ராஜ்
23 / 23
புதுச்சேரி கடற்ரையில் இடிந்து விழுந்த நிலையில் பழைய துறைமுக பாலம். | படம்: எம்.சாம்ராஜ்