1 / 26
தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின்போது, மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் நீரை அகற்றாமல் இயந்திரம் மூலம் கான்கீரிட் கலவை கொட்டப்படுகிறது. | படம்: ஆர்.வெங்கடேஷ்
2 / 26
3 / 26
4 / 26
தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் கல்லணைக் கால்வாய் ஆற்றில் பாசன வாய்க்காலுக்குத் தண்ணீர் செல்லும் குழாயை மீண்டும் பழையபடி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம் : ஆர். வெங்கடேஷ்
5 / 26
தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த ஆகாயத் தாமரைகளை நீர்வளத் துறையின் கரைக் காவலர்கள் அகற்றினர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
6 / 26
7 / 26
8 / 26
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் சீறிப் பாய்கிறது. | படம்: ஆர். வெங்கடேஷ்
9 / 26
10 / 26
11 / 26
மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக்கு வந்த காவிரி நீர் கல்லணையில் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
12 / 26
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பாசனத்துக்காகக் காவிரியில் தண்ணீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து, பூக்கள், நவதானியங்கள் தூவினார். | படம்: ஆர்.வெங்கடேஷ்
13 / 26
மதுரை ஆதீன மடத்தின் சன்னிதானம் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மோடி மீண்டும் பிரதமர் ஆவதே மக்கள் விருப்பம் என்று கூறினார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 26
மதுரை ஆதீனம் மடத்தில் ஆக்கிரமிப்புகளை மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் அதிகாரிகள் விடுதியில் உள்ள பொருட்களை வெளியேற்றினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 26
16 / 26
சேலத்தில் மாம்பழம் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாம்பழம் மண்டியிலிருந்து விற்பனைக்காக மாம்பழங்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள். | படம்: எஸ்.குரு பிரசாத்
17 / 26
ஆனி மாத முதல் நாளில் சேலம் ராஜகணபதி கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி. | படம்: எஸ்.குரு பிரசாத்
18 / 26
சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் வளாகத்தில் 'பெண் கல்வி திட்டம்' தொடர்பாக வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகை அண்மையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவித சம்பவம் ஏற்படும் இதை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
19 / 26
தமிழ்நாடு மகளிர் காவல் துறையின் 50-வது ஆண்டு விழாவையொட்டி சென்னையிலிருந்து கோடியக்கரை வரை பாய்மர படகில் சென்ற போலீசார் புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை சென்றனர். | படம்: எம்.சாம்ராஜ்
20 / 26
21 / 26
புதுச்சேரி சட்டசபை வளாகத்தி்ல் முதல்வர் முன்னிலையில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதையடுத்து, சட்டசபைக்கு நுழையும் ஓவ்வொருவரையும் பரிசோதனை செய்த பிறகே காவலர்கள் உள்ளே அனுப்புகின்றனர். | படம்: எம்.சாம்ராஜ்
22 / 26
கோடை முடிந்தும் வெயிலின் வெப்பம் இன்னும் குறையவில்லை. | இடம் - பாரதி பூங்கா. | படம்: எம்.சாம்ராஜ்
23 / 26
புதுச்சேரி ஈசிஆர் சாலை கொட்டுப்பாளையம் நவீன மீன் அங்காடி எதிர்புறம் கால்வாய் மூடாமல் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி துார்நாற்றம் விசுகிறது | படம்: எம்.சாம்ராஜ்
24 / 26
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பண்ருட்டி பலாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது. பலாப்பழம் ரூபாய் 50 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
25 / 26
வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள். | படம்: வி.எம்.மணிநாதன்
26 / 26
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. | படம்: ஜெ.மனோகரன்