1 / 27
தஞ்சாவூர் கூட்டுறவு காலணி மாநகராட்சி பள்ளியில் முதல் நாள் வகுப்பிற்கு முன் இறைவழிபாடு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு உற்சாகமாகக் கல்வியாண்டைத் தொடங்கிய மாணவர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
2 / 27
தஞ்சாவூர் கூட்டுறவு காலணி மழலையர் பள்ளியில் கோடை விடுமுறைக்குப் பின் இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியை.
3 / 27
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ரத்த மையத்தில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
4 / 27
தஞ்சாவூர் வழியாகச் செல்லும் கல்லணை கால்வாயில் இர்வின் பாலம் அருகே அடர்ந்து பரவி வளர்ந்திருக்கும் வெங்காயத் தாமரை செடிகள். | படம்: ஆர். வெங்கடேஷ்
5 / 27
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே ராகுல்காந்தி பதவி இழப்பை கண்டித்து தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ஆர். வெங்கடேஷ்
6 / 27
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் பெண்கள் கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் மாநில வேலைவாய்ப்பு இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பதிவு செய்த பட்டதாரி பெண்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
7 / 27
8 / 27
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி., மாணிக்க தாகூர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 27
மதுரை தனியார் விடுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்ட மையக்குழு கூட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 27
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரா மேல்நிலைப் பள்ளியில் சிறுவர்களுக்கான கட்டிடம் ரயில் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 27
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரா மேல்நிலைப் பள்ளியில் சிறுவர்களுக்கான கட்டிடம் ரயில் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது . | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 27
சேலம் அஸ்தம்பட்டி அருகே கன்னங்குறிச்சி சாலையில் அரசு அருங்காட்சியக புதிய கட்டிட கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்
13 / 27
14 / 27
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பயனற்ற படுக்கைகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் பராமரிப்பின்றி முட்புதராக காட்சியளிக்கிறது. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள இப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
15 / 27
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அருகே முள்ளுவாடி 2-வது ரயில்வே கேட் சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் பணிகள் நிறைவடைந்த ஒரு சில பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. | படம்: எஸ்.குரு பிரசாத்
16 / 27
இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்திய பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஐஆர்சிடிசி பொது மேலாளர் கே.ரவிக்குமார். உடன் மதுரை பகுதி மேலாளர் பாஷித் அகமது. | படம்: நா. தங்கரத்தினம்
17 / 27
மதுரை வைகை ஆறு. | படம்: நா. தங்கரத்தினம்.
18 / 27
19 / 27
20 / 27
21 / 27
நிரந்தர பள்ளி கட்டிடம் கேட்டு புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் வெங்கட சுப்பாரெட்டியார் சிலையருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்: எம். சாம்ராஜ்
22 / 27
23 / 27
24 / 27
25 / 27
புதுச்சேரி தலைமை ஆசிரியை மேரி டைஸ்சியை கொலை செய்ய முயன்ற திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரெபெக்கா ரோஸ்லின் நிஷா மற்றும் அவருடன் மூன்று பேரையும் உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். | படம்: எம்.சாம்ராஜ்
26 / 27
வேலூர் மாநகராட்சி 58-வது வார்டுக்கு உட்பட்ட விஸ்வநாதன் நகர், அவுஸ்சிங்போர்டு, அண்ணா நகர், சரஸ்வதி நகரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
27 / 27
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி