Published on : 14 Jun 2023 18:26 pm

ஓமந்தூரார் மருத்துவமனை பரபரப்பு முதல் வேலூர் போராட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 14, 2023

Published on : 14 Jun 2023 18:26 pm

1 / 22
அமலாக்கத் துறையினர் கைதுக்குப் பின் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துவரப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி.
2 / 22
அமலாக்கத் துறையின் மனுவை ஏற்று அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த முதன்மை அமர்வு நீதிபதி அல்லி. | படம்: ம.பிரபு
3 / 22
அமைச்சர் செந்தில்பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாக நுழைவு வாயிலில், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர். | படம்: ம.பிரபு
4 / 22
மதுரை ஜவகர் புரத்தில் இயங்கிவரும் அறிவுசார் மாற்றுத்திறனுடையோர் சிறப்புப் பள்ளியில் புன்னகை பூக்கள் திட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகள். | படம்: நா.தங்கரத்தினம்
5 / 22
6 / 22
சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி வரை செல்லும் ரயில்களின் அகலப்பாதை முன்னோட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 22
8 / 22
ரத்ததான தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரத்ததான சிறப்பு முகாம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 22
10 / 22
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் இருப்பதால் கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் மாடுகள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 22
கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள டைட்டில் பார்க்கை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்காணிப்பு வசதி ஏற்பாடுகளை பார்வையிட்டார் . | படம்: ஜெ.மனோகரன்
12 / 22
கோவை லட்சுமி மில்ஸ் வளாகத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் புதிய கிளையை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் ‘லுலு’ குழுமத்தின் தலைவர் யூசப் அலி.  | படம்: ஜெ.மனோகரன்
13 / 22
14 / 22
வேலூரில் ஆங்காங்கே சாலை ஓரங்களில் தள்ளுவண்டியில் விற்பனைக்கான குவிக்கப்பட்டுள்ள நாகப்பழங்கள். ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள நாகப்பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 22
16 / 22
புதுச்சேரி - கடலுார் ஈசிஆர் சாலை பிள்ளையார்குப்பம் சாலையோரம் உள்ள கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளன. இதனால் சாலையோர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. | படம்: எம்.சாம்ராஜ்
17 / 22
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குள் படகுகள் சென்றன. ஆனால் தேங்காய்திட்டு துறைமுகத்தில் கரையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் படகுகள் நிறுத்தப்பட்ட கரையோரம் குவிந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. | படம்: எம்.சாம்ராஜ்
18 / 22
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் படகுகள் | படம்: எம். சாம்ராஜ்
19 / 22
கோடை விடுமுறைக்கு பின் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் எக்கோல் ஆங்கிலோ பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பூக்களை துாவி வரவேற்க்கும் ஆசிரியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
20 / 22
21 / 22
22 / 22
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியில் அரசு அறிவித்து இருந்த அளவை விட அதிகமான மணல் அள்ளப்படுவதாக கூறி பாலாற்றில் டிராக்டர்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.

Recently Added

More From This Category

x