1 / 23
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தனது மனைவிக்கு சிகிச்சை மேற்கொள்ள ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த தருண்குமார் என்பவர் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிஎம்சி காலனி குடியிருப்பில் தங்கியுள்ளார். இன்று காலை மருத்துமனைக்கு சிகிச்சை சென்ற மனைவியை அழைத்து வர காரில் சென்றபோது கார் தீடீரென தீ பிடித்து எரிந்தது. உடனடியாக கார் ஒட்டி சென்ற தருண்குமார் காரில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 23
3 / 23
4 / 23
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 23
6 / 23
மதுரை ஆவின் அலுவலகத்தில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் ஆவின் பால் உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆய்வு குழுவில் பங்கேற்றார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 23
8 / 23
9 / 23
10 / 23
மதுரை கோட்ட ரயில்வே தொழிலாளர் சங்கம் டிஆர்இயூ சார்பில் முன்னாள் ராணுவ பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரயில்வே கோட்ட மேற்கு நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 23
புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் வாகன பிரச்சார நிறைவு கூட்டத்தில் சிபிஐ தேசிய செயலாளர் நாராயணா கலந்து கொண்டு பேசினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி சிபிஐ செயலாளர் சலீம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். | படம்: எம். சாம்ராஜ்
12 / 23
புதுச்சேரி ஜெயா நகரில் உள்ள என்எல்சி அலுவலகத்தில் மனுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வந்திருந்த ஜீவா தொழிற்சங்கத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 23
ரோட்டரி கிளப் கோவை ஸ்மார்ட் சிட்டி சார்பில் கோவை சீரநாயக்கன் பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள இறந்த சிறிய விலங்குகளுக்கான தனி மின் மயானத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் கிராந்தி குமார் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படம்: ஜெ மனோகரன்.
14 / 23
15 / 23
16 / 23
வேலூர் - ஆரணி சாலையில் உள்ள கண் மருத்துவமனை அருகே கால்வாய் சிலாப்புகள் ஆங்காங்கே உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் விபத்துக்குள்ளாகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 23
புதுச்சேரி மணப்பட்டில் உருவாக்கப்பட்ட திரைப்பட நகரம் | படம்: எம். சாம்ராஜ்
18 / 23
திரைப்பட நகரத்தில் அமைக்கப்பட்ட குடைகள்
19 / 23
புதுச்சேரி மணப்பட்டில் உருவாக்கப்பட்ட திரைப்பட நகரத்தில் அரசு கட்டிக் கொடுத்துள்ள வீடுகள். படம்: எம். சாம்ராஜ்
20 / 23
திரைப்பட நகரத்தில் அமைக்கப்பட்ட குடைகள் சரிந்து கீழே விழுந்துள்ளது. | படம்: எம். சாம்ராஜ்
21 / 23
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உள் அரங்கு. | படம்: நா. தங்கரத்தினம்
22 / 23
பல ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்த மதுரையில் டீக்கடை நடத்தி வரும் நேதாஜி ஹரிகிருஷ்ணன். | படம்: நா. தங்கரத்தினம்.
23 / 23