1 / 23
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை மலர் தூவி வரவேற்றனர். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 23
3 / 23
4 / 23
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாள் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறைக்குச் செல்லும் முன்பு கடவுள் வாழ்த்து உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவிகள் | படம்: எம். சாம்ராஜ்
5 / 23
புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பெயரை ஆர்வத்தோடு பார்வையிடும் மாணவிகள். | படம்: எம். சாம்ராஜ்
6 / 23
புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அலுவலகத்தில் உள்ள வாகனங்ளை ஜப்தி செய்த உத்தரவினை வாகனத்தில் ஒட்டும் அதிகாரிகள். | படம்: எம். சாம்ராஜ்
7 / 23
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதுச்சேரி தேங்காய்கிட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் ஐஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றும் மீனவர்கள். | படம் : எம். சாம்ராஜ்
8 / 23
புதுச்சேரி தேசிய மாணவர் படை பிரிவு மாணவர்களின், கடல் சாகச பயணத்தை கொடிசைத்து நிறைவு செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அருகில் பாஸ்கர் எம்எல்ஏ. | படம்: எம். சாம்ராஜ்
9 / 23
புதுச்சேரியில் கடல் சாகச பயணத்தை தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறைவு செய்த என்சிசி மாணவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 23
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில ஆணையாளர் நரேந்திர நாயர் தலைமையில் மாநகர காவல் அலுவலர் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 23
மதுரை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் மீதும் அவதூறு செய்தி பரப்பிவரும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கூறி அம்மா கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் மனு அளித்தார்கள் . | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
12 / 23
மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சியின் மகளிரணி சார்பாக மதுபான கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 23
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதுரை திருச்சி, விருதுநகர் ,தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களிடம் மோசடி செய்த நிதி நிறுவன தலைவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஆதித்தமிழர் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 23
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு. க ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். | படம்: எஸ். குரு பிரசாத்.
15 / 23
16 / 23
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.
| படம்: வி.எம்.மணிநாதன்
17 / 23
தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புகல் தொடங்கிய நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள புனித மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஸ்மைலி பொம்மைகள் அணிந்து வரவேற்றனர் . | படம் ஜெ .மனோகரன்
18 / 23
19 / 23
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இதனையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். அருகில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
20 / 23
மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலை . | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
21 / 23
22 / 23
23 / 23
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இதனையொட்டி, வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். | படம்: வி.எம். மணிநாதன்