1 / 18
மதுரை திருப்பரங்குன்றம் வலையங்குளம் பகுதியில் 20-ஆம் தேதி அதிமுக பொன்விழா மாநாடு நடைபெறும் இடத்தினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 18
மதுரை வணிகவரித் துறை அலுவலகத்தில் வணிகர் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சி துணை ஆணையாளர் வெண்ணிலா (பொறுப்பு ) மதுரை (கிழக்கு) வணிக வரி மாவட்டம் தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 18
மதுரை தெப்பக்குளத்தில் அருகே உள்ள சின்ன தெப்பக்குளத்தில் மாணவர்கள் உற்சாகமாக துள்ளி குதித்து தண்ணீரில் விளையாடினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 18
மதுரை மாநகராட்சி பூங்காவில் நடைபாதை பகுதியில் சிதைந்து இருக்கும் பகுதிகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பொருட்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 18
புதுச்சேரி வில்லியனுாரில் கட்டப்பட்டு நிறைவடைந்த ஆயுஷ் மருத்துவமனை. | படம்: எம்.சாம்ராஜ்
6 / 18
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிற்கும் பகுதியை ஆழப்படுத்தும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் லட்சுமி நாராயணன். | படம்: எம்.சாம்ராஜ்
7 / 18
புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினம் குறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் ஜெயந்தி ரவி ஐஏஏஸ். | படம்: எம்.சாம்ராஜ்
8 / 18
மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் மதுரையில் வீசிய சூறைக்காற்றில் சாய்ந்த மரங்கள் பல நாட்கள் ஆகியும் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. | படம்: நா.தங்கரத்தினம்
9 / 18
மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள். | படம்: நா.தங்கரத்தினம்
10 / 18
மதுரை மாநகராட்சி பூங்காவில் நடைபாதை பகுதியில் சிதைந்து இருக்கும் பகுதிகள் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பொருட்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 18
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அர்த்தனாரி நகர் சாலையில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
12 / 18
சேலம் பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த மக்கள் பஞ்சமி நிலங்களை மீட்டு தர கோரி சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீஸார். | படம்: எஸ்.குரு பிரசாத்
13 / 18
புதுச்சேரி ஆரியப்பாளையம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேம்பாலம். | படம்: எம்.சாம்ராஜ்
14 / 18
‘மருத்துவ உபகரணங்களுடன் மட்டும் விளையாடுவது எங்கள் கரங்கள் இல்லை, வண்ண தூரிகைகளுடன் விளையாடி வர்ணஜாலம் படைக்கும்’ என கண்ணைக் கவரும் அழகிய வண்ண ஓவியங்களை மதுரை மருத்துவக் கல்லூரி சுவர்களில் ஓவியம் தீட்டும் மருத்துவக் கல்லூரி மாணவிகள். | படங்கள்: நா.தங்கரத்தினம்
15 / 18
16 / 18
17 / 18
18 / 18