1 / 19
டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரங்கனைகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் ஏஐசிசிடியு ஜனநாயக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 19
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாடு கண்காணிப்பு அறையை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். | படம்: வி.எம்.மணிநாதன்
3 / 19
மதுரை அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பாக 13 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் பொதுச் செயலாளர் ஆறுமுக நயனார் தலைமையில் பெருந்துறை முறையீடு போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 19
மதுரை மத்திய சிறை வளாகத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் சிறை அங்காடி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 19
மதுரை சாரதா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவி யாழினி மூன்று மணி நேரத்தில் திருவாசகம் படித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 19
வேலூர், சித்தூர் மாவட்ட காவல் துறை இடையில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரண்டு மாநில காவல் துறை அதிகாரிகள் இடையிலான கூட்டம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் சித்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்
7 / 19
புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சிதிலமடைந்து கீழே விழுந்த வண்ணமாக உள்ளது. | படம்: எம்.சாம்ராஜ்
8 / 19
புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சிதிலமடைந்து கீழே விழுந்த வண்ணமாக உள்ளது. இடிந்து கீழே விழுந்த கட்டிடத்தை காண்பிக்கும் மூதாட்டி | படம்: எம்: சாம்ராஜ்
9 / 19
புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பார் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 19
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் பத்து சதவீதம் இடஓதுக்கீடு வழங்கக் கோரி காமராஜர் மணிமண்டபம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் தமிழ் ஓளி கல்வி வட்டம் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர். | எம்: சாம்ராஜ்
11 / 19
மாநில அளவில் எஸ்.சி., எஸ்.டி ஆணையம் வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி முதல்வரை சந்தித்து மனு அளித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எம்.பி. | படம்: எம்.சாம்ராஜ்
12 / 19
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் மழையால் சேதமடைந்த அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
13 / 19
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தலைமையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். | படம்: ம.பிரபு
14 / 19
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வெளியே உள்ள புதிய மேம்பாலத்தில் மேல் பராமரிப்பு சரி இல்லாததால் குப்பையாகவும் இன்று மாலை பெய்த மழைநீர் பாலம் மேல் தங்கும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது. மழை நீர் செல்லும் வழிகள் அனைத்து மணல்கள் மூடியுள்ளது. | படம்: ம.பிரபு
15 / 19
சென்னையில் இன்று காலை முதல் கடும் வெயில் வீசிய நிலையில் மதியத்திற்கு பெய்த திடீர் மழையில் பாதாசாரிகள் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து செல்கின்றனர். | இடம்: சிம்சன் சிக்னல் அருகே. | படம்: ம.பிரபு
16 / 19
சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ஒரு சிறுவன் அந்த வழியாக வந்த காரில் லிப்டு கேட்க, மழையால் பாவம் என்று உதவிக்காக காரை நிறுத்த, வடிவேல் காமடி போல் வந்தது பாருங்க... ஓரு கூட்டம் கார் கதவை திறந்தது மட்டும்தான் அவருக்கு தெரியும், கூட்டத்தை பார்த்து அரண்டு விட்டார். வேறு வழி இல்லாமல் ஏற்றியும் கொண்டார். | படம்: ம.பிரபு
17 / 19
கோவை செல்வபுரம் குறிஞ்சி கார்டன், ராஜேஸ்வரி நகர் பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை. | படம்: ஜெ.மனோகரன்
18 / 19
சேலத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 11-ம் தேதி வருகை தருகிறார். இதற்காக பெரியார் மேம்பால சாலை தடுப்பு கம்பிகளுக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.குரு பிரசாத்
19 / 19
சேலம் மாநகரில் அதிகரித்து வரும் திருட்டு, கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ்.குரு பிரசாத்