அவசரக் கட்டுப்பாட்டு மையம் முதல் ஒத்தக்கடை மோதல் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 3, 2023
Published on : 03 Jun 2023 19:07 pm
1 / 10
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள். | படம்: ம.பிரபு
2 / 10
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களுக்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடுகள் மற்றும் உதவி தகவல் மையத்தை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். | படம்: ம.பிரபு
3 / 10
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி தகவல் மையம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பளர் பொன்ராமு பேசுகிறார். | படம்: ம.பிரபு
4 / 10
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர். மு.க.ஸ்டாலின். | படம்: ம.பிரபு
5 / 10
மதுரை புதூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமைக் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது . | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 10
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் பகுதியில் இரு தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாகனங்கள் சேதமடைந்தன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 10
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கூடலழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 10
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் போகும் மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் காணப்படும் கம்பிகள். | படம்: ஜெ.மனோகரன்
9 / 10
கோவை பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயிலில் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயர். | படம்: ஜெ.மனோகரன்
10 / 10
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு இன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மவுன அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.