1 / 15
மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு சாலை வியாபாரிகள் தங்கள் வாழ்வாரத்தை மீட்டு தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 15
மதுரை பிபி குளத்தில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பாக மதுரை பிஎஸ்என்எல் ஊழியர்கள் 4ஜி & 5ஜி சேவையினை பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 15
மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அளித்து சிறப்புரையாற்றினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 15
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நிறுவனர் நாள் விழாவில் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் துணை வேந்தர் கீதா லஷ்மி உள்ளிட்டோர். | படம் .ஜெ .மனோகரன்
5 / 15
கும்பகோணத்திலுள்ள 4 சிவன் கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. | படம்: சி.எஸ்.ஆறுமுகம்
6 / 15
கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் இன்று (ஜூன் 1) படகு அலங்கார போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த மே 26-ம் தேதி தொடங்கி கோடை விழா நடைபெற்று வருகிறது. | படம்: ஆ.நல்லசிவன்
7 / 15
கொடைக்கானல் படகு அலங்கார போட்டி.| படம்: ஆ.நல்லசிவன்
8 / 15
கொடைக்கானல் படகு அலங்கார போட்டி.| படம்: ஆ.நல்லசிவன்
9 / 15
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நிறுவனர் நாள் விழாவில் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளை வழங்கிய கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் துணை வேந்தர் கீதா. | படம்: ஜெ.மனோகரன்
10 / 15
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் மின்விசிறி இயங்காததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து உறவினர்கள் கை விசிறியால் வீசும் அவல நிலை உள்ளது.
11 / 15
சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், மூன்று பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
12 / 15
சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர், கோயில் திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
13 / 15
சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் வந்து செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
14 / 15
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி மற்றும் அன்னை தவம் பெற்ற நாயகி அம்மன் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சுற்று வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்படித்து தேரை இழுத்தனர்.
15 / 15
அரியலூர் - ஸ்ரீ ஆலந்துறையார் திருக்கோயிலில் நடைபெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.