1 / 14
காமராஜர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தின. இடம் - சென்னை வள்ளுவர் கோட்டம் | படம்: ம.பிரபு
2 / 14
அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள போக்குவரத்து பூங்காவில், போக்குவரத்து போலீஸாருக்கு விதிமுறைகளை மீறும் வாகனங்களை பிடிக்க நவீன உபகரணங்கள் மற்றும் கேமராவுடன் கூடிய வாகனங்களை வழங்கினார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து பூங்காவில் விதிமுறைகளை விளக்கி கூறினார். | படங்கள்: ம.பிரபு
3 / 14
தினமும் ஆயிரகணக்கில் மக்கள் வந்து போகும் இடமான புரசைவாக்கம் பகுதியில் மக்களின் அவசர பயன்பாட்டுக்காக கங்காதீஸ்வரர் கோயில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம டாய்லெட்’ பராமரிப்பு இல்லாமல் புதர் சூழ்ந்து பயன் இல்லாமல் இருக்கிறது. | படம்: ம.பிரபு
4 / 14
சென்னை மாநகராட்சி சார்பில் கூவம் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கம்லி சுவர்கள் அமைத்து பாதுகாத்து வரும் நேரத்தில் அண்ணாசாலை பின்புறம் உள்ள தெற்கு கூவம் சாலையில் இரு புறங்களிலும் உள்ள பகுதிகளில் கழிவுகளை கொட்ட இரும்பு கேட்டுகளை உடைத்தும், திருடியும் உள்ளே மீண்டும் கூவத்தில் கழிவுகள் கொட்டப்படுகிறது. அப்பகுதியில் பல இடங்களில் சுவர்கள் இடிக்கப்பட்டு கழிவுகள் கொட்டப்படுகிறது (அருகில் புதுப்பேட்டை உள்ளது) | படம்: ம.பிரபு
5 / 14
சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சுட்டெரிக்கும் சூரியனின் பின்னனியில் மெரினாவில் உள்ள காந்தி சிலை. | படம்: ம.பிரபு
6 / 14
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நடைபெறும் இடத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக முதல் முறையாக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 14
மதுரை நத்தம் செல்லும் மேம்பாலத்தில் சூரிய ஒளி உதவியுடன் அதிக தொழில்நுட்ப கேமரா 7.3 கிலோ மீட்டர் தூரம் 21 கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 14
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்க்கும் நான் கூட்டம் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 14
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரி அருகே கூடலழகர் கோயிலுக்கு சொந்தமான உள்ள நந்தவனத்தில் கூடலழகர் கோவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 14
மதுரை புறநகர் பகுதியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் பொது கூட்டம் நடைபெற இருப்பதால் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி ஆகியோர் மனு அளித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 14
மதுரையில் மிகவும் பழமையான புது மண்டபம் மூடப்பட்டுள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 14
வேலூர் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்
13 / 14
கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி இன்று (மே 31) நடந்த நாய்கள் கண்காட்சியில் பங்கேற்ற பல வகையான நாய்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. | படம்: ஆ.நல்லசிவன்
14 / 14
திருவிடைமருதூர் வட்டம், வயலூரில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சேத்ரபாலர் சிற்பம் மற்றும் நந்தியுடன் கூடிய கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. | படம்: சி.எஸ்.ஆறுமுகம்.