Published on : 29 May 2023 18:09 pm

அதிமுக போராட்டம் முதல் கலவரம் ஆன நடைபயணம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 29, 2023

Published on : 29 May 2023 18:09 pm

1 / 19
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது வைகை அணையில் இருந்து விடப்பட்ட தண்ணீர் சேர்த்து ஆகாய தாமரையை அகற்றப்படாமல் உள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 19
மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 19
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதி வலியுறுத்தியும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களும் ஒப்படைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 19
தொலைத்தொடர்புத் துறை சார்பில் சென்னை - அந்தமானுக்கு கடல் அடியில் கேபிள்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் மெரினா கலங்கரை விளக்கு அருகே அதற்கான பெரிய கப்பல் நங்கூரமிட்டுள்ளது. | படம்: ம.பிரபு
5 / 19
மத்திய அரசின் 9 ஆண்டுகள் ஆட்சி சாதனையை விளக்கும் விதமாக மக்கள் சந்திப்பு பேரியக்கம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு, மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு. | படம்: ம.பிரபு
6 / 19
காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்
7 / 19
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி. | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 19
வேலூர் ஓட்டேரி பகுதியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் இளநிலைப் படிப்பு விளையாட்டு பிரிவினருக்கான சேர்க்கை கலந்தாய்வு, கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்
9 / 19
சிவகங்கை மாவட்டம் தனியார் திரையரங்கில் ‘பப்ஸை’ பூனை சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அங்கு உணவுப் பொருட்கள் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.
10 / 19
புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கை அகற்றக் கோரி இன்று (29-ம் தேதி) நடைபயணமாக வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க முயன்றவர்களுக்கு அனுமதி மறுத்து காவல் துறையினர் தடுத்ததால் திருவண்ணாமலை - வேலூர் சாலை போர்க்களமாக மாறியது. | படம்: ஆர்.தினேஷ்குமார்
11 / 19
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற கிடா முட்டு சண்டையில் 30 ஜோடிகள் பங்கேற்றன. | படம்: இ.ஜெகநாதன்
12 / 19
திமுக அரசைக் கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டம். | படம்: ஜெ.மனோகரன்
13 / 19
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டம். | படம்: ஜெ.மனோகரன்
14 / 19
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் சுட்டேரிக்கும் வெயில் முடிவடைகிறது. இதையடுத்து புதுச்சேரியை சுற்றி பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள குடை பிடித்து செல்கின்றனர். | படம்: எம்.சாம்ராஜ்
15 / 19
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தமிழ் அறிஞர்களின் நன்றி பாராட்டும் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு செங்கோல் பரிசளிக்கப்பட்டது. | படம்: எம்.சாம்ராஜ்
16 / 19
திமுக அரசைக் கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் ராமநாதபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். | படம்:
17 / 19
திமுக அரசைக் கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் திருச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
18 / 19
திமுக அரசைக் கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் விருதுநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
19 / 19
திமுக அரசைக் கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினை பதவி விலக வலியுறுத்தியும் கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

Recently Added

More From This Category

x