ஸ்விக்கி ஊழியர்களுக்கான போராட்டம் முதல் கோவையில் சிஎஸ்கே ஆதரவுப் பேரணி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 27, 2023
Published on : 27 May 2023 18:33 pm
1 / 15
ஸ்விக்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்
2 / 15
மதுரை வைகை ஆற்றில் அபிவிருத்தி மற்றும் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள குழுக்கே உயர்மட்ட மேம்பாலம் திறந்து வைத்து மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அலங்காநல்லூர் ,வாடிப்பட்டி, திருமங்கலம் ஒன்றியங்களை சார்ந்த ஊராக குடியிருப்பிற்கான 3 கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடக்கி வைத்தார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 15
வேலூர் விஐடி பல்கலையில் நடைபெற்ற ஸ்டார்ஸ் திட்ட மாணவர்கள் 6-ஆம் ஆண்டு சந்திப்பு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் இன்னசென்ட் திவ்யா. | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 15
வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஸ்டார்ஸ் திட்ட மாணவர்கள் 6-ஆம் ஆண்டு சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன். | படம்: வி.எம்.மணிநாதன்
5 / 15
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் "யோகா மற்றும் மாற்று மருத்துவம்" என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 15
மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர் நேருவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 15
புதுச்சேரி பண்டித ஜவஹல்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள். | படம்: எம்.சாம்ராஜ்
8 / 15
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஆதரவு தெரிவித்து, ஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் பிராண்ட் சார்பில் கோவையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள். | படம்: ஜெ.மனோகரன்
9 / 15
திருவிடைமருதூர் வட்டம், துக்காச்சியிலுள்ள சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 12-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு கிடக்கும் கல்வெட்டுக்களை ஆய்வுமேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆய்வினர் வலியுறுத்தியுள்ளனர். | படம் : சி.எஸ். ஆறுமுகம்
10 / 15
பள்ளிகள் கோடை விடுமுறையையொட்டி கோவை காந்திபுரம் மாநகராட்சி நீச்சல் குளத்தில் குளிக்கும் சிறுவர்கள். | படம்: ஜெ.மனோகரன்
11 / 15
ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஆதரவு தெரிவித்து கோவையில் நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
12 / 15
13 / 15
14 / 15
15 / 15