1 / 12
கோவை மாநகர காவல் துறை சார்பில் பெண் காவலருக்கான ஐம்பதாம் ஆண்டு முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் இந்த மாரத்தான் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி ஆணையாளர்கள் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். | படம்: ஜெ. மனோகரன்
2 / 12
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 12
வேலூர் மாவட்ட தொழில் மையம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான தனிச்சிறப்பு திட்ட அறிமுக கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 12
மதுரை கூலழகர் பெருமாள் கோவில் வைகாசி மாத முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வியூக சுந்தர்ராஜ் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 12
புதுச்சேரியில் ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் சென்று பயிற்சி பெற உள்ளனர். இதையடுத்து அவர்கள் சட்டமன்றத்தில் வந்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவ-மாணவியர். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 12
மதுரை பாலரங்காபுரத்தில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் தொடங்கப்பட உள்ளன. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 12
மதுரை வைகை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேல் அடுக்கு பாலம் நாளை திறக்கப்பட உள்ளதால் ஆங்காங்கே பாலம் இணைப்புகள் பணிகள் நடைபெறாமல் உள்ளன. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 12
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. | படம்: ஜி.ராதாகிருஷ்ணன்
9 / 12
காரைக்குடி பாதாளச் சாக்கடை கழிவுநீரை தேனாற்றில் திறந்துவிடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். | படம்: ஜெ.ஜெகநாதன்
10 / 12
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2001 முதல் நிலுவையில் இருந்து வரும் அறநிலையத் துறை வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மதுரையில் அரசு வழக்கறிஞர்கள் - அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. | படம்: கி.மகாராஜன்
11 / 12
திட்டக்குடி அருகே கல்லூர் ஊராட்சியில் கான்கிரீட்டில் அமைக்கப்பட்ட வடிகால் வாய்க்காலில் மின்கம்பத்தை நட்ட மின்வாரியத்தினரால் ஏற்பட்ட சர்ச்சைக் காரணமாக மாவட்ட ஆட்சியரின் தலையீட்டுக்குப் பின் மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது. | படம்: ந.முருகவேல்
12 / 12
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மே 24 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதன் நிறைவு நாளான இன்று சிறுதானிய கண்காட்சியை பார்வையிட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன் துணைவேந்தர் கீதாலஷ்மி உள்ளிட்டோர் | படம்: ஜெ.மனோகரன்