1 / 11
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. அருகில், துணை மேயர் சுனில்குமார், ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்
2 / 11
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், வட்டாட்சியர் செந்தில், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) பிரசன்னகுமார் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 11
புதுச்சேரியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் இயற்கையாக கிடைக்கும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்குவை அதிக அளவில் வாங்கி உண்கின்றனர். இடம்.மேட்டுப்பாளையம்,புதுச்சேரி. | படங்கள்.எம்.சாம்ராஜ்
4 / 11
புதுச்சேரி அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து மருத்துவமனையில் மருந்துகள் தரம் குறித்து ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அருகில் பாஸ்கர் எம்எல்ஏ,மருத்துவ இயக்குனர் ஸ்ரீராமூலு. | படம்: எம். சாம்ராஜ்
5 / 11
புதுச்சேரி கல்லுாரியில் சேர்ப்பதற்க்காக இருப்பிடம் மற்றும் சாதி சான்றிதழ் பெற உழவர்கரை வட்டாசியர் அலுவலகத்தில் வரிசையில் நின்ற பெற்றோர்களுடன் மாணவர்கள். | படம்: எம். சாம்ராஜ்
6 / 11
சிஐடியு சார்பில் தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியை நோக்கி நடைபயணம் மே மாதம் 20 தேதி முதல் 30 தேதி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் இருந்து கிருபானந்த வாரியார் சாலை வரை நடைபயணம் சென்ற சிஐடியுவினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 11
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மண் பானைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றாக ‘மண் பாட்டில்கள்’ புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன. கோவை கவுண்டம்பாளையத்தில் சாலையோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் ஜாடிகள். | படம்: ஜெ.மனோகரன்
8 / 11
கோடைகாலங்களில் திருச்செந்தூர் தேரிக்காடு பகுதிகளில் விளையும் ஒருவகை முந்திரி பழங்கள் கோவைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இடம்: ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி நிறுத்தம். | படம்: ஜெ.மனோகரன்
9 / 11
வெளிநாடுகளுக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்த முதல்வருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வெயில் கடுமையாக இருந்ததால் மாடியில் குடைகளுடன் பாதுகாப்பு பணியை செய்தனர். | படங்கள்:எம்.முத்துகணேஷ்
10 / 11
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, நெரிஞ்சிபேட்டை நீர்மின் கதவணையில் பராமரிப்புப் பணி முடிந்தையடுத்து நீர் தேக்கி வைக்கப்பட்டது. இதனால் சேலம் - ஈரோடு மாவட்ட இடையே விசைப்படகு போக்குவரத்து 20 நாட்களுக்கு பிறகு தொடங்கியது. | படம்: த. சக்திவேல்
11 / 11
கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில்களில் வைகாசிப் பெருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. | படம்: சி. எஸ் . ஆறுமுகம்