ரூ.2000 நோட்டுகளை மாற்றும் மக்கள் முதல் சரிந்து விழுந்த மைதான மேற்கூரை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 23, 2023
Published on : 23 May 2023 18:50 pm
1 / 12
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதுச்சேரி யுகோ வங்கியில் வரிசையில் நின்ற பொதுமக்கள் | படம்: எம்.சாம்ராஜ்
2 / 12
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மாற்றக் கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்பினர். | படம்: எம்.சாம்ராஜ்
3 / 12
மறைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 12
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். | படம்: வி.எம்.மணிநாதன்
5 / 12
மதுரை புட்டு தோப்பு பகுதியில் மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சுசீந்திரம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 12
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொரப்பாடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில், குடியிருப்புக்கு விண்ணப்பத்த திரளான பெண்கள் வந்திருந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்
7 / 12
தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளும் முறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, சேலம் கோட்டை எஸ்பிஐ வங்கி முன்பு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. | படம்: எஸ்.குரு பிரசாத்
8 / 12
சேலம் மாவட்டத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள முஸ்லிம்களுக்கு சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில் பரிசோதனை செய்து கொண்ட முஸ்லிம்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்
9 / 12
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே படித்துறையில் உள்ள கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தர்ப்பனை மண்டபம். | படம்: ஜெ.மனோகரன்
10 / 12
சேலம் இரும்பாலை அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு பைப்லைன் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் இயற்கை எரிவாயு மையத்தை பைப் லைன்ஸ் இயக்குனர் நானாவேர் திறந்து வைத்து பலூனை பறக்க விட்டார். | படம்: எஸ்.குரு பிரசாத்
11 / 12
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தின் கேலரி மேற்கூரை ரூ.15 கோடியில், 8 மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இந்தப்பணிகள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலியில் நேற்று பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் ஆள்நடமாட்டம் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
12 / 12