1 / 18
குழந்தையுடன் மாயமான மனைவியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காத பேரணாம்பட்டு காவல் துறையினரை கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற கூலி தொழிலாளி ராஜிவ்காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். | படம்: வி.எம்.மணிநாதன்
2 / 18
புதுச்சேரியில் போக்சோ பிரிவு வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றம் கல்வெட்டை திறந்து வைத்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா அருகில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுச்சேரி நீமிமன்ற நீதியரசர் செல்வநாதன், வக்கீல் சங்க தலைவர் குமரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். | படம்: எம். சாம்ராஜ்
3 / 18
புதுச்சேரி முதல்வரின் கார் செல்வதற்கு போக்குவரத்து சிக்னலில் பயணிகளை அதிக நேரம் காக்க வைக்க கூடாது என போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து இன்று இந்திராகாந்தி சிக்னலில் முதல்வரின் கார் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்னர் சென்றது . | படம்: எம். சாம்ராஜ்
4 / 18
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவகல்லுார -மருத்துமனையில் டயாலிஸ் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி, அருகில் சபாநாயகர் செல்வம். | படங்கள்: எம். சாம்ராஜ்
5 / 18
புதுச்சேரி சர்வதேச பல்லுயில் தின விழாவில் பல்லுயில் மேலாண்மை குழுக்களுக்கு காசோலையை வழங்கிய முதல்வர் ரங்கசாமி அருகில், சபாநாயகர் செல்வம்,அமைச்சர் தேனீ.ஜெயக்குமார். துறை இயக்குனர் வஞ்சனவல்லி. | படம் : சாம்ராஜ்
6 / 18
புதுச்சேரி சர்வதேச பல்லுயில் தின விழாவில் காரைக்கால் துறைமுகத்தில் கரை ஓதுங்கிய எண்ணெய் திமிங்கலத்தை மீனர்கள் உதவியுன் கடலில் படகு மூலம் இழுத்து சென்று நடுக்கடலில் விட உதவி செய்த மீனவர்களை பாராட்டி அவர்களுக்கு சன்மானத்தை வழங்கிய முதல்வர் ரங்கசாமி, அருகில் சபாநாயகர் செல்வம்,தேனீ.ஜெயக்குமார் | படம்: எம். சாம்ராஜ்
7 / 18
கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கோவை ராஜ வீதி மகளிர் பள்ளியில் +1 மாணவிகளுக்கு பள்ளியில் சேர விண்ணப்பம் படிவம் வழங்கப்பட்டது . | படம் ஜெ .மனோகரன்
8 / 18
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 18
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்திரை திருவிழாவில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். | படம்; எஸ் . கிருஷ்ணமூர்த்தி
10 / 18
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
11 / 18
கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழாவில் தேரில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்த அம்மன் சிரசு. படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 18
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி. | படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 18
நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சார்ந்தோர். |படம்: வி.எம்.மணிநாதன்.
14 / 18
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக ஆட்சித் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சங்கீதா ஐஏஎஸ் அவர்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார் | படம் .எஸ்; கிருஷ்ணமூர்த்தி
15 / 18
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. | படம் :எஸ். கிருஷ்ணமூர்த்தி
16 / 18
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சித்திரை திருவிழாவில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். | படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி
17 / 18
இன்று பெய்த கோடை மழையில் கோவை பார்க் கேட் நஞ்சப்பா சாலையில் பெருக்கெடுத்து ஆறாக ஓடும் மழை நீர் .படம் ஜெ .மனோகரன்
18 / 18
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலு தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது . |படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி