பாஜக போராட்டம் முதல் கிராமிய கலைப் பயிற்சி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 20, 2023
Published on : 20 May 2023 18:45 pm
1 / 10
மதுரை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மீனா இசக்கி முத்து தலைமையில் கள்ளச் சாராயத்தினால் ஏற்பட்ட இறப்பை கண்டித்து மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 10
மதுரை காந்தி மியூசியத்தில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக் கால விடுமுறையை முன்னிட்டு கிராமிய கலைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 10
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் உத்தரவின்படி வேலூர் மாவட்ட தேர்தல் பிரிவிற்கு பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து வழங்கப்பட்ட 800 விவிபேட் இயந்திரங்கள் கன்டெய்னர் லாரி மூலம் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது . இவை அனைத்தும் ஸ்கேன் செய்து பாதுகாப்பாக வைக்கப்பட்டது. | படம்:வி.எம்.மணிநாதன்
4 / 10
கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்து பாஜக மாவட்ட மகளிர் அணி சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . | படம்:வி.எம்.மணிநாதன்
5 / 10
கள்ளச் சாராய விற்பனையை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் | படம்: ஜெ.மனோகரன்
6 / 10
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவணிக்கப்படாமல் காலாவதியான நிலையில் உள்ள தீயணைப்பு சாதனங்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து புதுபிக்க நடவடிக்கை எடுப்பார்களா? | படம்: வி.எம்.மணிநாதன்
7 / 10
கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலும் பொருட்படுத்தாமல் பொம்மைகளுக்கு வண்ணம் பூசும் வட இந்தியர்கள். | படம்: ஜெ.மனோகரன்
8 / 10
கோவை ஆத்துப்பாலம் சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தில் குடை பிடித்தபடி செல்லும் மக்கள் | படம்: ஜெ.மனோகரன்
9 / 10
புதுச்சேரி பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அருகில் பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சுவாமிநாதன், உள்துறை அமைச்சர் நடச்சிவாயம், செல்வகணபதி எம்.பி. ஆகியோர் உடன் உள்ளனர். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 10
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மயக்கவியல் துறையை சார்ந்த மருத்துவர் உதவி பேராசிரியர் சையது தாஹிர் ஹுசைனின் பத்திரிகையாளர் சந்திப்பு எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி