Published on : 19 May 2023 18:53 pm

10-ம் வகுப்பு முடிவுகள் முதல் உதகை மலர் கண்காட்சி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 19, 2023

Published on : 19 May 2023 18:53 pm

1 / 19
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்த ஆசிரியர்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்
2 / 19
கோவை ஈச்சனாரி செல்வம் மஹால் மண்டபத்தில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசும் மாநில தலைவர் அண்ணாமலை. | படம்: ஜெ.மனோகரன்
3 / 19
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கோவை சித்தாபுதூர்  மாநகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு  இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த  தேர்ச்சி பெற்ற மாணவிகள் | படம்: ஜெ.மனோகரன்
4 / 19
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேலூரில் மாணவிகள் தங்களின் தேர்ச்சி மதிப்பெண்களை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டனர். | படம்:வி.எம்.மணிநாதன்
5 / 19
வேலூரில் அனல் காற்றுடன் சுட்டெரித்த வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள குடை பிடித்து நடந்து சென்ற பெண்கள். | படம்:வி.எம்.மணிநாதன்
6 / 19
மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களும் ஒப்படைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெருதிரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 19
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் பகுதியில் மேம்பாலத்தின் கீழ் மாட்டு தொழுவமாகவும், சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்கப்பட்டுள்ளது. | படம்: வி.எம்.மணிநாதன்
8 / 19
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 19
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பாக மூத்த வழக்கறிஞர் உருவப்படம் மற்றும் உடமைகள் வைப்பு அறை திறப்பு விழா உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 19
மதுரை உலக தமிழ் சங்கத்தில் இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பாக 8வது மாநில மாநாட்டில் சிறப்பு உரையாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 19
புதுச்சேரி பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு பட்டயலை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி,கல்வித்துறை அமைச்சர் நம்ச்சிவாயம்,செயலர் ஜவகர் | படம்: எம். சாம்ராஜ்
12 / 19
புதுச்சேரி ஜவஹர் பால பவனில் பழைய கட்டிடம் சிதிலம் அடைந்த நிலையில் பள்ளிக் குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட முடியாததால் சுட்டெரிக்கும் வெயிலில் பயிற்ச்சியில் ஈடுபடும் மாணவ-மாணவியர். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 19
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை திரும்ப பெறக் கூறி ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்புக் குழு சார்பாக மதுரை தென்மண்டல காவல் துறை தலைவரிடம் மனு அளித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 19
சித்திரை திருவிழாவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் முன்வைத்து இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 19
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையின் தீர்ப்புக்காக பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தி மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட முருகன். | படம்:வி.எம்.மணிநாதன்.
16 / 19
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்காக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள தடுப்புச் சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.குரு பிரசாத்
17 / 19
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்ணா பூங்காவில் இன்று வண்ண மலர் செடி தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள். | படம்:எஸ்.குரு பிரசாத்
18 / 19
நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர்க் கண்காட்சி இன்று (மே 19) தொடங்கியது. | படம்: ஆர்.டி.சிவசங்கர்
19 / 19

Recently Added

More From This Category

x