1 / 16
தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 16
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில், அருங்காட்சியகம் தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியக் காப்பாளர் முனிவர் மருது பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 16
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் முன்பு ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 16
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி வேலூர் கோட்டையினுள் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு திறன் ஊக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் அடிமுறை பயிற்சி அளிக்கப்பட்டது. | படம்:வி.எம்.மணிநாதன்.
5 / 16
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளதை தொடர்ந்து கொடிமரத்திற்கு தங்க தகடு பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 16
கோரிப்பாளையத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் செல்லும் மக்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 16
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பை முன்னிட்டு மதுரை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 16
ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாக கோவை குறிச்சி குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தமிழ் எழுத்துகளால் இணைத்து 20 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் திருவள்ளுவர் சிலை | படம்: ஜெ.மனோகரன்
9 / 16
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீஸாருக்கு வெப்பத்தை தடுக்கும் தெர்மகோல் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. அதை அனைவரும் அணிந்து பணியாற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் உத்தரவிட்டுள்ளார். | இடம் - எழும்பூர் சிக்னல் | படம்: ம.பிரபு
10 / 16
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நினைவு கல்வெட்டு திறப்பு விழா மத்திய சென்னை மாவட்டம் அம்பத்தூர் பகுதிக் குழு சார்பில் பாடியில் மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கல்வெட்டை மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார் பொதுச்செயலாளர் மூ.வீரபாண்டியன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு
11 / 16
மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் ஒருங்கிணைப்போடு நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாம்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 2,312 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் அ. நாராயணசுவாமி உடன் மாநில அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஸ் சேகர், எம்பி சு.விங்கடேசன். | படம்: நா.தங்கரத்தினம்.
12 / 16
பாதாள சாக்கடை பணி நீண்ட நாட்களாக பாதியில் நிற்பதால் அடைக்கப்பட்டுள்ள சாலையின் ஒருபகுதி வாகன நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மதுரை கே.கே நகர் 80 அடி சாலை. | படம்: நா.தங்கரத்தினம்
13 / 16
புதுச்சேரியில் வெயில் நாளுக்கு நாள் சதம் அடித்து கொண்டிருக்கிற நிலையில் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
14 / 16
புதுச்சேரி கள்ளச் சாராய விற்பனையில் நடவடிக்கை எடுக்காத கலால் துறையை கண்டித்து ஆலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்பினர். | படம்: எம்.சாம்ராஜ்
15 / 16
வேலூரில் பிற்பகல் பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
16 / 16
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி மாணவர் பெருமன்றத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர். | படம்: எம்.சாம்ராஜ்