1 / 10
தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 10
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக கேபிள் டிவி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
3 / 10
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை (மே 21) முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் வரை செல்லும் ரத யாத்திரையை மதுரை பழங்காநத்தம் பகுதியில் காங்கிரஸார் பார்வையிட்டனர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 10
கோவையிலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு கோவை இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. | படம்: ஜெ மனோகரன்
5 / 10
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட முருகன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். | படம்: வி.எம்.மணிநாதன்
6 / 10
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிற்பக்கலை சிறப்பு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள். | படம்: ஜெ மனோகரன்
7 / 10
புதுச்சேரி நீட் அல்லாத பொறியியல், நர்சிங் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை சென்டாக் மூலம் வெளியிட்ட கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம். செயலர் ஜவஹர். | எம். சாம்ராஜ்
8 / 10
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் கல்வி கட்டணத்தை குறைக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவியர். | படம். எம்.சாம்ராஜ்
9 / 10
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஏழை தொழிலாளர்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கு வாழ்வாதாரம், ஊதியம், வீடு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர். | படம்: நா. தங்கரத்தினம்.
10 / 10
புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 87 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.