1 / 11
அஞ்சல்துறை சார்பில் நடைபெற்ற ‘ரோஸ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் பங்கேற்ற (இடமிருந்து) சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் ஜே.சாருகேசி, அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) பி.பி.ஸ்ரீதேவி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் கே.சோமசுந்தரம். | படம்: ம.பிரபு
2 / 11
அக்னி நட்சத்திர வெப்பத்தின் சூட்டை தணிக்க மருத்துவ குணம் நிறைந்த நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. விற்பனை இடம் புரசைவாக்கம் தாமஸ் சாலை | படம்: ம.பிரபு
3 / 11
மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து கட்டப்பட்டுள்ள நத்தம் மேம்பாலம் சமீப காலமாக பாலத்தின் மேல் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. போக்குவரத்துக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 11
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பாக திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஆட்டோக்கள் மீது பொய் வழக்குகளை போடுவது தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
5 / 11
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 11
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டோபிகானா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் வசதி கேட்டு கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 11
வேலூர் மாநகராட்சி கடைகளுக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை ஆணையர் ரத்தினசாமியிடம் வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 11
உலக செவிலியர் தினத்தையொட்டி இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் வேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கவிதா செவிலியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அருகில், செஞ்சிலுவை சங்க அவைத்தலைவர் ஜனார்த்தனன், செயலாளர் சிவவடிவு, டாக்டர் தீனபந்து, விஜயகுமாரி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 11
காட்பாடியில் ஒடை பிள்ளையார் கோயில் அருகே உள்ள டாக்சி ஸ்டேண்டை அப்புறப்படுத்த வலியுறுத்தும் காவல்துறையை கண்டித்தும், வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பதை கண்டித்தும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 11
கோவையில் இன்று கத்திரி வெயில் சுட்டெரித்தது. காந்திபுரம் நூறு அடி சாலையில் கூடைகள் விற்பனை செய்யும் வியாபாரி வெப்பத்தை தாங்க முடியாமல் ஒரு கூடையை தொப்பியாக பயன்படுத்தி வியாபாரம் செய்தார். | படம்: ஜெ.மனோகரன்
11 / 11
வெம்பக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வில் இன்று பண்டைகால சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. | படம்: இ.மணிகண்டன்