ததும்பும் மதுரை தெப்பக்குளம் முதல் டெட் தேர்ச்சி ஆசிரியர்கள் போராட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 13, 2023
Published on : 13 May 2023 20:29 pm
1 / 13
டெட் தேர்ச்சி ஆசிரியர்கள் 5 வது நாளாக DPI வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். படம் : ம.பிரபு
2 / 13
அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தனியார் மையம் ஆக்குதல் கண்டித்தும் தனி அமைச்சகம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். இடம்: ராஜரத்தினம் மைதானம், எழும்பூர். படம்: ம.பிரபு
3 / 13
டெட் தேர்ச்சி ஆசிரியர்கள் 5வது நாளாக DPI வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் ஈடுப்பட்டு வருகின்றனர். படம்: ம.பிரபு
4 / 13
சென்னையில் சில வெயில் தாக்கம் அதிகம் காரணமாக அனல் காற்றை தவிர்க்க குடையுடன் செல்லும் பெண்கள். படம்: ம.பிரபு
5 / 13
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.26.50 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறார் மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 13
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
7 / 13
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக மதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
8 / 13
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நீர் நிரம்பி காணப்படும் மதுரை தெப்பக்குளம். படம்: நா. தங்கரத்தினம்.
9 / 13
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நீர் நிரம்பி காணப்படும் மதுரை தெப்பக்குளம். படம்: நா. தங்கரத்தினம்.
10 / 13
மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடை பெற்ற பெண்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வில் கலந்து கொண்டு விளையாடிய கிரிக்கெட் வீராங்கனைகள். படம்: நா. தங்கரத்தினம்.
11 / 13
கர்நாடக மாநிலத்தில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து வேலூரில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் எதிரில் அண்ணா சாலையில் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர். படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 13
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்து பேசிய முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வசந்த லீலா. படம்: வி.எம்.மணிநாதன்.
13 / 13
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கு சம்பந்தமாக சமரச தீர்வு வழங்கப்பட்ட ஒருவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 32 லட்சம் தொகைக்கான ஆணையை வழங்கிய முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வசந்த லீலா. படம்: வி.எம்.மணிநாதன்.