1 / 11
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சங்கம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் அரசு மருத்துவதற்கான அரசாணை 293 உடனடியாக அமல்படுத்த வேண்டும் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது .| படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 11
சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 11
தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி உண்ணாவிரத போராட்டம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடத்தினர் | படம்; ம.பிரபு
4 / 11
வில்லிவாக்கம் ஐசிஎப் - கொளத்தூர் மற்றும் பூம்புகார் பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் - பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட தயார் நிலையில் உள்ளது | படம்; ம.பிரபு
5 / 11
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் கே.நாராயணசாமி தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி மருத்துவக்கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர்களுடம் செவிலியர் தினம் கொண்டாடினர் | படம் ; ம.பிரபு
6 / 11
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை பாண்டி கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு அவர்கள் கேக் வெட்டி இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள். | படம் ;எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 11
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியு சங்கத்தின் சார்பாக மோடி அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை நிறுத்த கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
8 / 11
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். ஆண்டுதோறும் மே 12-ம் தேதியன்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று செவிலியர் தினவிழா நடைபெற்றது.
இதற்கு மருத்துவ நிலைய அலுவலர் உ.பிரபாகர் தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் எஸ்.ஜீவா, ஜி.கலாராணி,கே.உமாராணி மற்றும் ஏராளமான செவிலியர்கள் பங்கேற்று, கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி, நோயாளிகளுக்கு பாரபட்சமின்றி மருத்துவ சேவையாற்றுவோம் என மெழுகு வர்த்தி ஏந்தி அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
9 / 11
வேலூரில் சுட்டெரித்த 103 டிகிரி வெயிலின் தாக்கத்தினால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்பட்ட கானல் நீர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 11
உலக செவிலியர் தினத்தையொட்டி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பாப்பாத்தி தலைமையில் செவிலியர்கள், பயிற்சி மாணவிகள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகைப்படம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழியை எற்றுக்கொண்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
11 / 11
உலக செவிலியர் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கலையரங்கில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற செவிலியர் தின விழாவில் கேக் வெட்டி கொண்டாடிய செவிலியர்கள். நைட்டிங்கேல் அம்மையாரின் படத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தப்பட்டது. | படம் ஜெ .மனோகரன்