Published on : 10 May 2023 19:07 pm

மதுரை மெட்ரோ பணி முதல் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 10, 2023

Published on : 10 May 2023 19:07 pm

1 / 12
மதுரை வைகை ஆற்றில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது . | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 12
புதுச்சேரி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வழியுறுத்தி சட்டமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற மார்க்கெட் வியாபாரிகள். | படம்: எம். சாம்ராஜ்
3 / 12
வாகன நெரிசலாக காணப்பட்டது மேல மாரட் வீதி. | படம்: நா. தங்கரத்தினம்.
4 / 12
சோளங்களை எலிகள் கடித்து விடுவதால் கோவை வேளாண் பல்கலை பண்ணையில் வலைகளால் போர்த்தியுள்ள சோளச்செடிகள். | படம் ஜெ .மனோகரன்
5 / 12
வாகனங்கள் செல்ல இயலாத படி குண்டும் குழியுமாக காணப்படும் மதுரை அய்யாவு தேவர் நகர் குறிஞ்சி மெயின் ரோடு. | படம்: நா. தங்கரத்தினம்.
6 / 12
சென்ற கல்வியாண்டில் அதிக கல்வி கடன் கொடுத்த வங்கி கலை பாராட்டி செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி , உடன் அதிக கல்வி கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள். | படம்: நா. தங்கரத்தினம்.
7 / 12
சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.கோவிந்தா கோஷம் வானை தொட பக்தர்கள் வடம் பிடித்து கிரிவலம் வந்தனர். சுமையான வயல்வெளிகளுக்கு நடுவே தேர் அசைந்தாடி சென்றது கண்கொள்ளாக் காட்சியாக காணப்பட்டது. | படங்கள்:எம்.முத்துகணேஷ்
8 / 12
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுவை பெற்று குறைகளை கேட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன். |படம்: வி.எம்.மணிநாதன்.
9 / 12
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேலங்காட்டில் பிரசித்தி பெற்ற பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவை வேலங்காடு, பனங்காடு, வல்லாண்டராமம் மற்றும் அன்னாசிபாளையம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தினர். ஏரித்திருவிழாவில் புஷ்பரதத்தை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர். திருவிழாவில் பக்தர்கள் அலுகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிழாவிற்க்கு அருகில் உள்ள ஊர்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து குவிந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 12
புதுச்சேரி தமிழ் சங்கம் தேர்தல் குறித்து பேட்டியளித்த தற்போதைய தலைவர் முத்து மற்றும் நிர்வாகிகள். | படம்: எம். சாம்ராஜ்
11 / 12
புதுச்சேரி அண்ணாசாலையிலிருந்து - இந்திராகாந்தி சிலை வரை புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த முதல்வர் ரங்கசாமி அருகில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுதி எம்எல்ஏ நேரு. | படம்: எம். சாம்ராஜ்
12 / 12
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பாக மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பாக தேசிய புலனாய்வு முகாமை வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் முகமது அப்பாஸ் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . | படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி

Recently Added

More From This Category

x