நெல்லை கோடைமழை முதல் கோயில் திரும்பிய கள்ளழகர்வரை| நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 9, 2023
Published on : 09 May 2023 18:53 pm
1 / 9
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன பராமரிப்புத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் முன் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர். | படம்: நா. தங்கரத்தினம்.
2 / 9
தென்மண்டல தீயணைப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு வந்திறங்கிய தீ தடுப்பு உபகரணங்கள். | படம்: நா. தங்கரத்தினம்.
3 / 9
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் அழகர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி மதுரை வைகை ஆற்றில் இறங்கினார். திருவிழா முடிந்து கள்ளழகர் கோவில் சென்றடைந்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
4 / 9
உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவை சங்கத்தின் வலைதளத்தை தொடங்கி வைத்து பார்வையிட்ட புதுவை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மருத்துவ இயக்குனர் ஸ்ரீராமுலு. | படம்.எம்.சாம்ராஜ்
5 / 9
புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவகத்தை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர். | படம்:எம். சாம்ராஜ்
6 / 9
வேலூர் தொழிலாளர் அலுவலர் அலுவலகத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளிக்க வந்த தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 9
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஆன்லைன் முறையில் அபராதம் விதிப்பதை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 9
கடந்த இரு நாட்களாக வாட்டி வதைத்த வெயிலுக்கு மத்தியினில் இன்று மாலை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டையில் பேருந்துநிலையம் அருகில் மழைக்கு நடுவே செல்லும் ஆட்டோ. | படம் : எம். லஷ்மி அருண்
9 / 9
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன , உடன் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு , திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் , அமைச்சர் ராஜகண்ணப்பன் , மேயர் சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் பலர் உடனிருந்தனர். | படம் : எம். லஷ்மி அருண்