Published on : 06 May 2023 18:47 pm

‘தி கேரளா ஸ்டோரி’ எதிர்ப்பு போராட்டம் முதல் ஆரோவில் பேரணி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 6, 2023

Published on : 06 May 2023 18:47 pm

1 / 13
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றத்தை நோக்கி நடைப்பயண இயக்கம் துவக்க விழா கூட்டம் சனிக்கிழமை திருச்சி உறையூரில் நடைபெற்றது. இதில் நடைப்பயண இயக்கத்தைத் துவக்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு. அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன். | படம்: ஆர்.வெங்கடேஷ்
2 / 13
திருச்சி ரயில்வே மேம்பாலம் அருகே புதிய பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை செய்யும் பணியில் ஆள் துளையிடும் இயந்திரத்துடன் தொழிலாளர்கள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
3 / 13
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அனைத்து அரசுத் துறைகளின் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. | படம்: ஆர்.வெங்கடேஷ்
4 / 13
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பாகவத மேளா நாட்டிய நாடகம் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒளியில் பிரகலாத சரித்திரம் என்ற நாடகம் விடிய விடிய நடைபெற்றது. | படம்: ஆர் வெங்கடேஷ்
5 / 13
திருச்சி ஶ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அக்கல்லூரியின் நிறுவனர் கே.சந்தானம் திருவுருவ சிலையைத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். | படம்: ஆர்.வெங்கடேஷ்
6 / 13
தி.மு.க திருச்சி மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் பால்பண்ணை அருகே நடைபெற்றதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகிறார். அருகில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. | படம்:ஆர்.வெங்கடேஷ்
7 / 13
மயிலாடுதுறையில் செயல்பட்டு வந்த பெண்களுக்கான கூடைப்பந்து பயிற்சி மையம் வாரணாசிக்கு மாற்றும் உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு மதுரையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை, சு.வெங்கடேசன் எம்.பி யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். | படம்: நா.தங்கரத்தினம்.
8 / 13
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபடியில் கருட வாகன சேவையில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் . | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 13
சுடானிலிருந்து மீட்கப்பட்ட புதுச்சேரி வில்லியனுாரை சேர்ந்த முருகன் முதல்வர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி கூறினார். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 13
ஆரோவில் நிர்வாக செயல்பாட்டை கண்டித்து ஆரோவில் வாசிகள் ’ஓற்றுமை அமைதி’ பேரணியை சோளார் கிச்சனிலிருந்து விருந்தினர் மாளிகை வரை நடத்தினர். | படம்:எம்.சாம்ராஜ்
11 / 13
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி காட்பாடியில் திரையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர். | படம்:வி.எம்.மணிநாதன்
12 / 13
கோவை சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் சக்கரபாணி , செந்தில் பாலாஜி மற்றும் உணவு வழங்கல் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர். | படம்: ஜெ.மனோகரன்
13 / 13
சித்ரா பவுர்ணமியையொட்டி, வேலூர் வாணியர் வீதி சுந்தர விநாயகர் கோயில் சார்பில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்லக்கு. | படம்:வி.எம்.மணிநாதன்

Recently Added

More From This Category

x