1 / 23
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுவை பெற்று குறைகளை கேட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன். | படம்: வி.எம்.மணிநாதன்
2 / 23
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மீனாட்சி சுந்தரேசர் பிரியாவிடை தேரோட்டம் நான்கு மாசி வீதி வழியாக வந்து கீழமாசி வீதி உள்ள தேரடிக்கு வந்து சேர்ந்தது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 23
மதுரை 137 ஆண்டு பாரம்பரியமிக்க ஏவி பாலத்தின் பாலத்தில் சைடு கைப்பிடிகளை அகற்றி சித்திரைத் திருவிழா முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் விஐபிகள் மேம்பாலத்தில் இருந்து பார்ப்பதற்காக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 23
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 23
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகே விஐபிகள் கார்கள் நிறுத்தும் இடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 23
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும், மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசின மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி. | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 23
கோவை குற்றாலம் அருவியை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உள்ளிட்டோர். | படம்: ஜெ.மனோகரன்
8 / 23
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான திருநங்கைள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்தனர். | படம்: எம்.சாம்ராஜ்
9 / 23
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் அரவான் திருப்பலிக்கு பின்னர் திருநங்கைகள் கையில் உள்ள வளையல்களை உடைத்தும் தாலிகளை அறுக்து எடுக்கும் கோயில் பூசாரிகள் | படம்: எம். சாம்ராஜ்
10 / 23
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான புதன்கிழமை பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த மதுரை பிரியாவிடை சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருத்தேர் | படம்: நா.தங்கரத்தினம்
11 / 23
மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கிய நாள் முதல் கோடை மழை நகரின் வெப்பத்தைத் தணித்து குளிர்வித்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி நான்மாடக் கூடலை நேற்று மாலை மேகங்கள் முற்றுகையிட்டு மழையைப் பொழிந்தன. இடம்: மதுரை ஏவி பாலம். | படம்: நா. தங்கரத்தினம்.
12 / 23
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள். | படம்: நா. தங்கரத்தினம்
13 / 23
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை | படம்: வெங்கடாஜலபதி
14 / 23
சேலத்தில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவர்கள். | படம்: லக்ஷ்மி நாராயணன்
15 / 23
சென்னையில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மேயர் பிரியா மனுக்களை பெற்றார். | படம்: பி.ஜோதி ராமலிங்கம்
16 / 23
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வாங்க சென்னை சிதம்பரம் மைதான வளாகத்தில் கூடிய ரசிகர்கள். | படம்: ஸ்ரீநாத்
17 / 23
கோவை வடக்குப் பகுதியில் கோடை மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர். | படம்: எம்.பெரியசாமி
18 / 23
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளில் நடைபெற்ற தேரோட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்ட போலீசார். | படம்: நா.தங்கரத்தினம்.
19 / 23
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளில் நடைபெற்ற தேரோட்டத்தில் வேடங்கள் அணிந்த படியும் கைலாய வாத்தியங்கள் வசித்த படியும், தேருடன் திரண்டு வந்த பக்தர்கள். | படம்: நா. தங்கரத்தினம்
20 / 23
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இன்று அழகர்மலையிலிருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரைக்கு புறப்பட்டார். நாளை மதுரை மாநகர எல்லையில் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.
21 / 23
புதுச்சேரியில் புஷ்கரணி விழா புதன்கிழமை மாலை ஆரத்தியுடன் நிறைவடைந்தது. சங்கராபரணி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
22 / 23
கொடைக்கானல் அருகே காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சின்னூர், பெரியூர் மலைக்கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். | தகவல்: ஆ.நல்லசிவன்
23 / 23
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கைதிகள் உள்ளிட்டோருக்கான 3 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. | தகவல்: அ. முன்னடியான்