Published on : 02 May 2023 18:41 pm

கோடை மழை முதல் வைகைக்கு தண்ணீர் வருகை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே.2, 2023

Published on : 02 May 2023 18:41 pm

1 / 21
கோவை ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி பகுதியில் உள்ள மின்சார ட்ரான்ஸ்பார்மில் பட்டு இரண்டு ஆண் மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தன. அப்பகுதியில் வீடுகள் அதிகம் உள்ளதால் தினமும் வரும் மயில்களுக்கு தானியங்கள் போடுகின்றனர். இதைச் சாப்பிடுவதற்காகவே அப்பகுதியில் அதிகமான எண்ணிகையில் வரும் தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பறவை ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடைபயிற்சி வருபவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். | படம்: ஜெ.மனோகரன்
2 / 21
டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி சேலம் பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாமக்கல் மாவட்ட பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர். | படம்: எஸ்.குரு பிரசாத்
3 / 21
தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை தேரோட்டம் நடைபெற்ற போது ஆயிரக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். படம். ஆர்.வெங்கடேஷ்
4 / 21
சேலத்தில் நேற்று நள்ளிரவு கன மழை பெய்தது. இதனால் ஆட்சியர் அலுவலக வளாக சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. | படம்: எஸ்.குரு பிரசாத்
5 / 21
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 21
பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் பி.ஜி.டி.சங்கரை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக பட்டியல் அணியினர். | படம்: வி.எம்.மணிநாதன்
7 / 21
மதுரையில் கோடை வெயில் அக்னி நட்சத்திரம் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், திடீர் மழையின் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குளம் போல் காணப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 21
கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு இலவச பயிற்சி முகாம் தொடங்கியது. இதில், ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை செய்து காண்பித்த வீராங்கனை. | படம்: ஜெ.மனோகரன்
9 / 21
தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்திற்கும், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் 3 சங்கத்திற்கும் அஞ்சல் நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 21
மிஸ் கூவாகம் 2023 ஆக சென்னை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். | படம்: சாம்ராஜ்
11 / 21
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதால் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வைகை நதியில் வந்து அடைந்தது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 21
சேலம் தாதகாப்பட்டி பகுதியில் திராவிட விடுதலைக் கழக மாநாடு நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். | படம்: எஸ்.‌குரு பிரசாத்
13 / 21
சேலத்தில் நுங்கு சீசன் அதிகரித்துள்ளது. ஏற்காடு சாலை அஸ்தம்பட்டி அருகே விற்பனைக்காக நுங்குகளை வெட்டும் வியாபாரி. | படம்: எஸ்.குரு பிரசாத்
14 / 21
சித்திரை வீதிகளில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நேரலையைக் காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
15 / 21
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 21
திருநங்கைளின் இஷ்ட தெய்வமாகக் கருதப்படும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சுமார் 50,000 திருநங்கைகள் திரண்டு கூத்தாண்டவர் கோயில் பூசாரிகளிடம் தாலிக் கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
17 / 21
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் டிஐஜி ரஜேஸ்வரி மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார். | படம்: எஸ்.குரு பிரசாத்
18 / 21
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் கிராம குடியிருப்பு பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்
19 / 21
கோவை நஞ்சப்பா சாலையில் தேங்கிய மழை நீரில் நீந்தி செல்லும் வாகனங்கள். | படம்: ஜெ .மனோகரன்
20 / 21
மதுரையில் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி. | படம்: ஆர்.அஷோக்
21 / 21
சென்னையில் கோடை மழையால் சாலையில் தேங்கி நின்ற மழைநீர். | படம்: ஆர்.ரகு

Recently Added

More From This Category

x