கர்நாடக தேர்தல் களம் முதல் ஹைதராபாத் கனமழை வரை - தேச உலா போட்டோ ஸ்டோரி @ ஏப்.29, 2023
Published on : 29 Apr 2023 20:24 pm
1 / 12
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரிங்கா காந்தி சனிக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
2 / 12
மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பின் "குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற ஏன் இவ்வளவு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. அரசு அந்த மனிதரைப் பாதுகாக்கிறது” என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
3 / 12
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பிதார் மாவட்டத்தின் ஹம்னாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உரையாற்றினார்.
4 / 12
கர்நாடக மாநில பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் உரையைக் கேட்க காத்திருந்த கூட்டத்தின் ஒரு பகுதியினர். இந்தக் கூட்டத்தில் வாக்குகள் மூலம் காங்கிரஸுக்கு மக்கள் பதிலடி தருவர் என்று பிரதமர் தெரிவித்தார்.
5 / 12
கொச்சியில் ஏப்.25-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த முதல் வாட்டர் மெட்ரோவில் பயணிப்பதற்காக ஹைக்கோர்ட் நிலையத்தில் டிக்கெட் வாங்க காத்திருந்த மக்கள் கூட்டம்.
6 / 12
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அகிலேஷ்புரில் நடந்த காங்கிரஸ் பேரணிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.
7 / 12
கொச்சியில் ஏப்.25-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த முதல் வாட்டர் மெட்ரோவில் பயணிப்பதற்காக ஹைக்கோர்ட் நிலையத்தில் டிக்கெட் வாங்க காத்திருந்த மக்கள் கூட்டம்.
8 / 12
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தில் சனிக்கிழமை மதியம் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது.
9 / 12
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் 7-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை சனிக்கிழமை மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
10 / 12
ஹைதராபாத்தில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக நல்லகுண்டாவில் உள்ள முசி என்ற பகுதியில் 40 முதல் 40 இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
11 / 12
ஹைதராபாத்தில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக நல்லகுண்டாவில் உள்ள முசி என்ற பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம்.
12 / 12
கர்நாடகாவில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் முறை சனிக்கிழமை தொடங்கியது. வாக்களிப்பதற்கு முன்பாக முதிய பெண்மணி ஒருவர் தனது வாக்காளர் அட்டையை காண்பிக்கிறார்.